பாசிக்குடாவில் சா்வதேச துாய்மைப்படுத்தல் தினம்

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்கள் பாதுகாப்பு வாரம் தொடர்பான நிகழ்வுகள்  திங்கள் கிழமை (17) பாசிக்குடாவில் நடைபெற்றது.

பாசிக்குடா கடற்கரையோரம் மற்றும் கடற்கரையோடு அன்மித்த, பகுதிகளில் காணப்பட்ட பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் கழிவுப்பொருட்க்கள் போன்றன அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வு மட்டக்களப்பு கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்ட்டது.

மாவட்ட அதிகாரி தி.தயாரூபன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர்,திருமதி ஷோபா ஜெயரஞ்சித் கல்குடா கிராமசேவையாளர் க.கிருஷ்ணகாந்,கடல்படை,இராணுவத்தினர்,பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள்,

பொதுச்சுகாதார உத்தியோகஸ்த்தர்கள், சுற்றுலாவிடுதி சங்கம், கரையோர பேணல் தினைக்களம், மற்றும் பொதுமக்களும் இவ் துப்பரவு பணியில் ஈடுபட்டனர்.

செப்ரம்பர் 15தொடக்கம் 21 வரை இவ் நிகழ்வு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நிகழ்த்துவதற்கு ஏற்பாடு செய்யப்ட்டுள்ளது.