ஏறாவூர் மின்சாரசபை மின்கம்பத்தை அகற்றவேண்டும் மக்கள் ஆர்ப்பாட்டம்.


-செங்கலடி நிருபர்-
ஏறாவூர் ஐயங்கேணி ஜின்னா வீதியின் 7ம் குறுக்கில் வசிக்கும் மக்கள் இன்று (13) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது வீதியானது 125மீற்றர் கொண்ட சிறிய ஒடுங்கிய வீதியெனவும் இவ் வீதியால் கனரக வாகணங்கள் பயணிப்பது மிகவும் சிரமமானதாகவிருப்பதாகவும் இப்படியிருக்கையில் தமது வீதியில் மின்கம்பங்களை பொருத்தி 33000W கொண்ட மின்னினைப்பை அரிசிஆலைக்கு வழங்குவதற்கு ஏறாவூர் மின்சாரசபை மக்களின் நன்மை கருதாமல் பொருத்துவதால் தாம் மிகுந்த அசௌகரியத்திற்கு உள்ளாவதாக கூறி உடனடியாக மின்சாரசபை இதை கவணத்தில் எடுத்து மின் கம்பங்களை அகற்றவேண்டும் என மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்ட இடத்திற்கு ஏறாவூர் பற்று தவிசாளர் நாகமணி கதிரவேல் மற்றும் ஏறாவூர் பற்று ஐயங்கேணி பிரதேச சபை உறுப்பினர்கள் வருகைதந்திருந்தனர். மக்களுடன் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடிய தவிசாளர் இது சம்மந்தமாக தாம் மின்சாரசபையுடன் தொடர்புகொண்டு மின்கம்பங்களை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசென்றனர்.