கனரக வாகனத்தைப் பயன்படுத்தி கோட்டைமுனை பாரிய வடிகான் துப்பரவு


மழைகாலம் ஆரம்பிக்கவுள்ளதால் நகரின் பாரிய வடிகானில் அடைக்கப்பட்டிருந்த கழிவுகள், பொலித்தீன்கள்,பிளாஸ்டிக் கொள்கலன்கள்; மற்றும் மண்கள் மாநகர சுகாதாரத் தொழிலாளர்களின் அர்பணிப்பு மிக்க சேவையினால் அகற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதனின் முயற்சியினால் கோட்டைமுனை மகா மாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் செல்லும் நகரின் பாரிய வடிகான் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி துப்பரவுப் பணிகள்  இன்று (08) இடம்பெற்றன.

சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.துஸ்யந்தனின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த வடிகானின் 200 மீற்றர் நீளமான வடி கானின் கழிவுகள் அகற்றப்பட்டன. கழிவு முகாமைத்தவம் பற்றி மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினால் விழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்தியும் கழிவுகளை சேகரிக்கும் வாகனங்களை வீதிக்கு வீதி அனுப்பியும் அவர்கள் மீண்டும் மீண்டும் கானினுள் கழிவுகளை இடுவதைக் கட்டுப் படுத்த முடியாமல் உள்ளது பெரும் மன வேதனையை ஏற்படுத்தகின்றது.

மானிட ஜென்மம் எடுத்த ஒவ்வோரு மனிதரும் மனித விழுமியங்களைக் கடைப்பிடித்து சுகாதாரத் தொழிலாளியும் மனிதர்தான் என்பதை உணரும் வரை இச்செயற்பாடுகளை மாற்றுவது மிகக் கடினமாக இருக்கும் அவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தவதைத் தவிர மாநகர சபைக்கு வேறு மார்க்கம் எதுவும் இல்லை.

மட்டக்களப்பு மாநகர சபையின் கழிவு முகாமைத்துவத்தை இலகுபடுத்தும் நோக்கோடு புதிதாக 30 சுகாதாரத் தொழிலாளர்களுக்கான நியமனம் வியாழக்கிழமை (06) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி மேயர் கே. சத்தியசீலன் உள்ளிட்ட மாநகரசபை உறுப்பினர்களால் வழங்கி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.