கொக்கட்டிச்சோலை முனைக்காடு கிராமத்தில் தங்கச்சங்கிலி அறுத்தவர் பொதுமக்களினால் நையப்புடைப்பு



(க. விஜயரெத்தினம்)
கொக்கட்டிச்சோலை முனைக்காடு கிராமத்தில் தங்கச்சங்கிலி அறுத்தெடுத்து தப்பியோடிய இளைஞன் ஒருவர் பொதுமக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.இவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு சந்தேகநபர் மோட்டார்சைக்கிளை கைவிட்டு தப்பியோடியுள்ளார்.இவ்வாறு பிடிக்கப்பட்ட சந்தேகநபர் அங்கு கூடியிருந்த பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்டுள்ளான்.

கொக்கட்டிச்சொலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் புதன்கிழமை (19.09.2018) இரவு 9.00 மணியளவில் இத்திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முனைக்காடு கிராமத்திலுள்ள வீடொன்றில் புகுந்துகொண்ட இரண்டு இளைஞர்கள் அங்கிருந்த பெண்ணிடம் உள்ள தங்கச்சங்கிலியை அறுத்துவிட்டு அதனை திருடிச்செல்ல முற்பட்டவேளையில் ஒருவர் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டார். மற்றையவர் கொண்டுவந்த மோட்டார் சைகிளையும் கைவிட்டு தப்பி சென்றுள்ளார்.

இந்த திருட்டுச்சம்பவத்திற்கு வருகைதந்த இளைஞர்கள் இருவரும் வடிசாரயம் அருந்தி நிறைவான போதையில் காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.இவ்வாறு பொதுமக்களினால் மடக்கி பிணிக்கப்பட்ட சந்தேகநபர் தற்போது கொக்கட்டிச்சோலை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இத்திருட்டு சம்பந்தமாக கொக்கட்டிச்சோலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

படுவான்கரை பிரதேசத்தில் சட்டவிரோத மது உற்பத்தியினாலும்,போதைப்பொருள் வியாபாரத்தினாலும் குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டு செல்வது குறிப்பிடத்தக்கதாகும்.இவ்வாறான குற்றச்செயல்களையும்,அசம்பாவிதங்களையும் கட்டுப்படுவதற்கு பொலிஸ் மாதிபர்,கிழக்கு மாகாண பொலிஸ்மாதிபர்,மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றார்கள்.