கணிதம், வரலாறு. ஆங்கிலப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை !! கண்டுகொள்ளாத கிழக்கு கல்வி அமைச்சு !!

(கதிரவன்)
கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு வியாழக்கிழமை 2018.09.13 பெற்றோர்களின் ஆரப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. திருகோணமலை வடக்கு எல்லையில் அமைந்துள்ள பதவி சிறிபுர வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குமாறு கோரியே இது நிகழ்த்தப்பட்டது.

இவ்வித்தியாலயத்தில் 28 ஆசிரியர் ஆளனி இருந்த போதிலும் 18 ஆசிரியர்களே சேவையாற்றுகின்றனர். கணிதம், வரலாறு. ஆங்கிலம், போன்ற பிரதான பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையில் இரண்டு தவணைகள் நிறைவடைந்துள்ளது. 

மீதமுள்ள இத்தவணையிலாவது எமது பிள்ளைகள் கற்பதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியே இது மேற்கொள்ளப்பட்டது. இதனால் உட்துறைமுக வீதியில் கல்வி அமைச்சுக்கு முன்னால் போக்குவரத்து தடங்கல்களும் ஏற்பட்டது. நிலமையை சமாளிக்க பொலிசார் அங்கு வரவழைக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.