சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானம்



12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 195 ரூபாவால் அதிகரிக்க வாழ்க்கைச்செலவு குழு தீர்மானித்துள்ளது.

எரிவாயு விலையினை அதிகரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தீர்மானிக்குமாறு கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது வாழ்க்கைச் செலவுக் குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.

அதன்படி , 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 195 ரூபாவால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு குழு பரிந்துரைத்துள்ளது.

இதேவேளை , பால் மாவின் விலையை 25 ரூபாவால் குறைக்க வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது.