சம்மந்தன் தமிழ் மக்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமாக இருந்தால் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கவேண்டும்



(கனகராசா சரவணன்)
இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லையாயின் தமிழ் கூட்டமைப்பின் தலைவரும்; எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு ஒரு வழகாட்டியாகவும் சிறந்த தலைவராகவும் இருக்கவேண்டுமாக இருந்தால் அவர் இந்த தமிழ் மக்களுக்காக தனது எதிர்கட்சி பதவியையும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் உடனடியாக இராஜிநாமா செய்து அரசியலில் இருந்து ஒதுங்குவது தான் அவருக்கு சிறந்ததாக இருக்கும். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.

தியாக தீபம் திலீபனின் 31 வது ஆண்டு; 8 ம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் சனிக்கிழமை (22) கட்சியின் மாவட்ட செயலாளர் கு.ஜெகநீதன் தலைமையில் இடம்பெற்றது இதில் கட்சி ஆதரவாளர்கள் பொமக்கள்கள் கலந்துகொண்டு தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு முன்னாள் சுடர் ஏற்றி மலர் தூவி 2 நிமிட அஞ்சலி செலுத்தினர் அஞ்சலி

இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் இவ்வாறு தெரிவித்தார்

தமிழ் மக்களுக்காக 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து தமிழ் மக்களுக்காக தியாகதீபம் திலீபன் ஒரு துளியேனும் நீர் அருந்தாது உண்ணாவிரதம்; இருந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டவர். ஆவர் தமிழ் மக்களுக்கா முன்வைத்த கோரிக்கைகள் இன்றுவரை நிறைவேறாத வண்ணம் இருந்து வருகின்றது.

இந்த தியாகத்தின் தியாகத்தை தமிழ் மக்கள் நினைவு கூரும் இந்த காலத்தில் வெள்ளிக்கிழமை நேற்றுமுன்தினம் இலங்கைக்கான யப்பான் தூதுவர் கெனிஸ்டி சுகுமாவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் ர் இந்த ஆட்சியில் எங்களுக்கு எதுவும் கிட்டவில்லை இந்த அரசாங்கத்தை நம்பி இனி பிரயோசனமில்லை என முன்வைத்துள்ள கருத்து உண்மையிலே தமிழ் மக்கள் நம்பி வாக்களித்த தலைமையாக இருக்கும் தலைவராக இருந்துகொண்டு இவ்வாறான பொறுப்பற்ற முறையில் முன்வைத்துள்ள கருத்து ஒரு நகைப்புக்குரியது.

அதேவேளை தமிழ் மக்கள் இதுவரை காலமும் சொல்லமுடியாத இழப்புக்களை இழந்து தங்களுடைய உயிரையும் உடமைகளையும் சொத்துக்களையும் தியாகம் செய்து இன்று வரை தமது உரிமைகளை அங்கீகரிக வேண்டும் என அதற்காக உலக மட்டத்தில் போராடுகின்ற தமிழ் தேசிய உணர்வாளர்களிடம் ஒரு வியப்படையக் கூடியதாக இருக்கின்றது.

நாங்கள் எங்களுடைய மக்களின் உரிமைகளை பெறுவதற்காக பல கோணங்களிலே புலம் பெயர் தளம் என பல போராட்டங்களை செய்துவருகின்ற இக் காலப்பகுதியில் 2015 இருந்து இவ்வளவு காலமும் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு எதிர்கட்சி பதவியை எடுத்துக் கொண்டு கதிரையை சூடாக்கி கொண்டு

அரசியல் கைதிகள் விடுதலை, மீள்குடியேற்றம் மற்றும் பல போராட்ட பாதிப்புக்களில் இருந்து தமிழ் மக்களை பாதுகாக்கின்ற பொறிமுறைகளை உருவாக்கும் நிலைப்பாட்டில் இருந்து ஒதுங்கி. தமிழ் மக்களுக்காக எதுவிதமான முன்னேற்கரமான செயற்பாடுகளில் இதுவரையும் ஈடுபடாது. மாறாக அரசாங்கத்தை முன்னோக்கி போர்குற்றவாளிகளையும். இந்த நாட்டின் அரசாங்கத்தையும் பாதுகாக்கின்ற விதமாக இவரின் நடவடிக்கை இடம்பெற்று வந்துள்ளது

அண்மையில் இந்தியாவில் வைத்து இரா.சம்மந்தன்; இலங்கை ஒரு சிங்கள பௌத்தநாடு என கருத்தை தெரிவித்துள்ளதாக டக்கிளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். எனவே தமிழ் மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனை இருக்க தக்கதாக முன்வைத்துள்ள கருத்து இந்த கருத்தாக உள்ளது.

எனவே தமிழ் மக்கள் ஒரு விடயத்தை விளங்கி கொள்ளவேண்டும் இப்படிப்பட்ட தலைமைத்துவம் தலைவர் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எவ்வாறு ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்கப் போகின்றார்; என நன்கு சிந்தித்து இனியாவது ஒரு மாற்றுத் தலைமையை தமிழ்மக்களின் நலனின் அக்கறை கொண்டு போராட்டத்தை அங்கீகரிக கூடிய தமிழ் மக்களின் தீர்வை உலக ரீதியில் சென்று பேசக்கூடிய ஒரு நல்ல மாற்றுத் தலைமைத்துவக்கு ஒப்புதலை தமிழ் மக்கள் வழங்கவேண்டும் என்றார்.