நாவிதன்வெளி விஞ்ஞான மாணவர்கள் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட கணித - விஞ்ஞான வினாடி வினாப் போட்டி



நாவிதன்வெளி 15ம் கிராம விஞ்ஞான மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 10.09.2018 அன்று கமு/சது/விவேகானந்தா மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் அமைப்பின் கன்னி நிகழ்வாக கணித -விஞ்ஞான வினாடி வினாப் போட்டியொன்று அமைப்பின் தலைவர் வ.யதுர்ஷன் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது. 

இந் நிகழ்வில் நாவிதன்வெளிப் பிரதேச செயலாளர் திரு.ரங்கநாதன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன், இப் போட்டியில் நாவிதன்வெளிக் கோட்டத்தைச் சேர்ந்த கமு/சது/ வேப்பையடி கலைமகள் வித்தியாலயம், கமு/சது/ விவேகானந்தா மகா வித்தியாலயம், கமு/சது/ றாணமடு இந்து மகா வித்தியாலயம், கமு/சது/ விவேகானந்தா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 10 மற்றும் தரம் 11 ஐச் சேர்ந்த மாணவர் குழுக்கள் பங்கு பற்றியதுடன் குலுக்கல் முறையில் பாடசாலைகளிடையே நடைபெற்ற போட்டியில் தரம் 10 மற்றும் தரம் 11 ல் கமு/சது/ நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் கமு/சது/ றாணமடு இந்து மகா வித்தியாலய மாணவர்கள் இறுதிப் போட்டியில் மோதின. 

கமு/சது/ நாவிதன்வெளி அன்னமலை வித்தியாலய மாணவர்கள் அணி தரம் 10 மற்றும் தரம் 11ல் 1ம் இடத்தைப் பெற்றதுடன் கமு/சது/ றாணமடு இந்து மகா வித்தியாலய மாணவர்கள் அணி 2ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர். 1ம் மற்றும் 2ம் இடத்தினைப் பெற்ற அணிகளின் அனைத்து மாணவர்களுக்கும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.