மட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு

(வரதன்) வீடமைப்பு அமைச்சர் சஜீத் பிரேமதாச இன்று காலை மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள விழுது நகர், சுபீட்சம் கிராமம் ஆகிய 2 வீட்டத்திட்டங்களைத் திறந்து வைத்தார்

மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில்நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அலிசாயிர் மௌலனா  பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்;, மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா உதயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டதையடுத்து அமைச்சர், மற்றும் அதிதிகளால்  வீட்டுத்திட்ட நினைவுக்கல் திரை நீக்கம் செய்து வைததார். அதனையடுத்து வீட்டுத்திட்டம் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுடனும் அமைச்சர் கலந்துரையாடினார்.

இன்றைய தினம் விழுது நகர் கிராமத்தில் 25 வீடுகளும், சுபீட்சம் கிராமத்தில் 18 வீடுக18 மாக 43 வீடுகள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டன. பிரேமதாச 2025ம்ஆண்டில் செமட்ட செவண (யாவருக்கும் வீடு) பெற்றுக்கொடுக்கும் நோக்கில் வீடமைப்பு மற்றும் நிர்மாணிப்பு துறை அமைச்சர் கௌரவ இந்திக்க பண்டார நாயக்க அவர்களின் வழிகாட்டலில் தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கொக்குவிலில் நிர்மாணிக்கப்பட்ட 141மற்றும் 142வது கிராமவிட்டுத்திட்டங்களாகும்