கொலை கலாசாரங்களைக்கொண்ட அலுஹோசுக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றனர் : மட்டக்களப்பில் சஜித் பிரேமதாச

( சிஹாராலத்தீப் )


அன்று மக்களை கொன்று குவித்த கொலை கலாசாரங்களைக்கொண்ட
அலுஹோசுக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர சிலர் முயற்சிக்கின்றனர் இத்தகைய தலைவர்கள் எமது நாட்டுக்கு மீண்டும் தேவையா என்பதனை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் .

இவ்வாறு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச
மட்டக்களப்பு கொக்குவில் பகுதியில் நடைபெற்ற வைபவத்தில் தெரிவித்தார்.

இன்று  மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைவடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலடங்கும்கொக்குவில் பிரதேசத்தில் விருட்சம் எனும்25வீடுகள் கொண்ட 141 வது மாதிரிக்கிராமத்தையும்   சூவிட்சம்எனும் 18 வீடுகள் கொண்ட 142  வது மாதிரிக்கிராமத்தையும் அமைச்சர் சஜித்  வைபவரீதியாகத்திறந்து வைத்தார்.

வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு உதவி பொது முகாமையாளர்  வீ.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் அமைச்சர்சஜித் பிரேமதாச தொடர்ந்து பேசுகையில் கடந்த காலத்தில் அரச பயங்கரவாதத்தைக்கொண்டுநடாத்தப்பட்ட  மிலேச்சத்தனமான ஆட்சியில் அரசியல் உரிமை,ஊடக சுதந்திரம்,இருக்கவில்லை மக்கள் உரிமைக்காக பாத யாத்திரை நடாத்ததடையிருந்தது.இன்றைய நல்லாட்சியில் மக்கள் சுதந்திரமாக செயல்படவும் இன மத குல பேதங்களற்ற ஆட்சி நடைபெறுகின்றது இதனையே இந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்

விரைவாக அரச மாளிகைக்குச் செல்லபொய்வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி  பல நகைச்சுவை நாடகங்களை முன்னைய ஆட்சியாளர்கள்அரங்கேற்றி பார்க்கின்றனர் இந்த பகிடி நாடகம் இன்று நாட்டுக்கு வெளியாகியுள்ளது.என அமைச்சர் சஜித் பிரேமதாச தமது உரையில் மேலும் தெரிவித்தார் .

இந்நிகழ்வில் தேசிய நல்லிணக்க ,ஒருமைப்பாடு மற்றும் அரசகரும மொழிகள் அமுலாக்க பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌ லானா .தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீநேசன் .மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாக ராஜா சரவணபவான் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் ,உள்ளிட்ட பலபிரமுகர்கள் .பிரசன்னமாகியிருந்தனர் .