செங்கலடி பிரதேச செயலாளர் மீது அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தாக்குதல்

( க.கிருஷ்ணராஜா , செங்கலடி நிருபர் )
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி பிரதான வீதியில் தனியார் ஒருவரது திரு.ச.சங்குப்பிள்ளை என்பவரது காணியானது சுமார் 30 வருடங்களுக்கு மேற்பட்டு இரானுவமுகாமாக இருந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு இராணுவம் காணி உரிமையாளரிடம் காணியை ஒப்படைத்துள்ள நிலையில் காணியினுள்  உரிமையாளரால் குடிசையும் அமைக்கப்பட்டுள்ளது.

அக் காணிக்குள் சிறிய பௌத்த புத்தர் சிலை வைத்த பந்தல் மற்றும் அரச மரம் உள்ள குறித்த காணிக்குள் வீடு அமைப்பதற்காக வனவள திணைக்களத்தின் அனுமதி மற்றும் பிரதேச செயலகத்தின் அனுமதி பெற்று தனியார் காணிக்குள் அமைந்திருக்கும் அரச மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று(23)காலை அரச அரசமரத்தை வெட்டிய காணி உரிமையாளரை ஏறாவூர் பொலிசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று மாலை வரை விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இந் நிலையில் மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்து அங்கு  நின்ற பெண்கள் மீது மிக தகாத வார்த்தைப் பிரியோகத்திணையும் பாவித்ததுடன் இங்கு இருக்க வேண்டாம் புல்லுமலை கிராமம் உள்ளது உங்கள் விடுதலைப்புலிகளின் ஊர் அங்கு செல்லுங்கள் என தீய வார்த்தைப் பிரயோகத்துடன் கூறியுள்ளார்.

இதனையடுத்தே சம்பவ இடத்திற்கு நிலமையை அறிய வருகை தந்திருந்த ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் நா.வில்வரெத்திணம் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்து பிரதேச செயலாளரது ஆடையையும் பிடித்து இழுத்து அடாவடித்தனமாக செயற்பட்டுள்ளார் சுமணரத்ன தேரர் . 
இது தொடர்பாக பிரதேச செயலாளர் நா.வில்வரெத்திணம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தேரருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றியும் பதிவு செய்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக எஸ்.வியாழேந்திரன், சீ.யோகஸ்வரன் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோரும் சம்வம் தொடர்பில் ஆராய்ந்தனர்