நாளை உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் இராஜகோபுர நிர்மானிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு



[NR]

கிழக்கிலங்கையின் நானிலங்களின் மத்தியில் இயற்கை அன்னையின் இதயமாக வரலாற்று தொன்மை மிக்கதும் மிகவும் சிறப்புமிக்கதுமான புண்ணிய தலமாக விளங்கும் ஆலயமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ உகந்தை முருகன் ஆலயத்தின் ஒன்பது படி அமைப்பு கொண்ட இராஜகோபுர நிர்மானிப்பதற்கான  திருவருள் கைகூடியுள்ளது.

இவ் இராஜகோபுர நிர்மானிப்பிற்க்கான அடிக்கல் நடும் நிகழ்வானது 2018.10.22 திங்கட்கிழமை நாளையதினம் காலை 9.00 - 9.45 இடைப்பட்ட சுபமுகூர்த்த வேளையில் மலையில் எழுந்தருளி அருளாட்சி செய்யும் புரியும் இறைவனின் திருவருளுடன் வெகு விமர்சியாக நடைபெறவுள்ளது. மேலும் இவ் இராஜகோபுர நிர்மானிப்பின் நிலமட்ட நிர்மாணப் பணிக்கு ரூபாய் 70 இலட்சம் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ் ஆலய மூன்று தல வரிசை உடைய மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் ,நிருத்த மண்டபம், தம்ப மண்டபம், வசந்த மண்டபம், யாகசாலை உள்பரிவார பிள்ளையார்,  நாகதம்பிரான், நவக்கிரகம், பைரவர், சண்டேஸ்வரர் மற்றும் மலையடிவாரத்தில் மழையுடன்  இணைந்தற்போன்று பிள்ளையார் ஆலயம், மலை வள்ளி அம்மன் ஆலயம் என்பனவும் அமைந்துள்ளன.

யாவும் பக்த அடியார்கள் தனிப்பட்டவர்களின் தனிப்பட்டவர்களின் அன்பளிப்புகளால் நிர்மாணிக்கப்பட்டது.  மஹோற்சவம் ஆடிப்பூரனையுடன்  அண்டி வரும் திருவோண நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. இத்தினமே  கதிர்காம தீர்த்தோற்சவ தினமாகும். கதிர்காம பாதயாத்திரிகர்கள்  உகந்தைமலை ஸ்ரீ முருகனை தரிசித்தே செல்வது வழமையாகும். தற்போதைய நிலையில் இராஜகோபுரம் மிக மிக இன்றியமையாததாகும்.

அதேபோன்று இவ் இராஜகோபுர நிர்மானிப்பிற்க்கானவும் அடியார்களிடம் இருந்து தயவுடன் உதவிகளினை கோருகின்றனர் ஆலய நிர்வாக சபையினர்.

கணக்கு இலக்கம் - 224200180006053
 மக்கள் வங்கி திருக்கோவில்

வண்ணக்கர் - 0773576401  திரு ஜே.எஸ்.டி.எம் சுதுநிலமே திசாநாயக்க,
செயலாளர் -  0776426490   திரு கே.எஸ் பஞ்சாட்சரம் .