மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் நூற்றுக் கணக்கானோர் பங்குகொண்ட வித்தியாரம்பம்


மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் விஜயதசமிப் பூஜையும் வித்தியாரம்பமும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விஜயதசமிப் பூஜைக்கு நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏடுதொடக்குவதற்காக  அழைத்து வந்திருந்தமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இந்த வித்தியாரம்ப நிகழ்வுகள் மிகவும் நேர்த்தியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்க்ஷஜானந்தஜீ மஹராஜ் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற நிகழ்வில், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் துறவி ஸ்ரீமத் சுவாமி ரிதமயானந்தஜீ மஹராஜ், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் துறவி ஸ்ரீமத் சுவாமி பிரபு பிறேமானந்தஜீ மஹராஜ் ஆகியோரால் சுமார் 180க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அக்ஷரப் பிரவேஷம் செய்துவைக்கப்பட்டது. அதாவது ஏடுதொடக்கி வைக்கப்பட்டது. இந்த வித்தியாரம்ப நிகழ்வுகள் சிறந்த முறையில் இடம்பெறுவதற்கு, இராமகிழுஷ்ண மிஷன் பழைய மாணவர்கள் சிறந்த சேவைகளைச் செய்துகொண்டிருந்தமையினையும்; அவதானிக்கக்கூடியதாய் இருந்தது. நூற்றுக் கணக்கான குழந்தைகள் வந்திருந்தாலும், நிகழ்வுகள் சிறந்த நேரமுகாமைத்துவத்துடன் நடாத்தப்பட்டு திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.  

தகவல்: இராமகிருஷ்ண மிஷன் பழைய மாணவர்கள்