கோறளைப்பற்று மத்தி பிரதேச இடைவிலகல் மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை



கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் நிறுவனத்தினால் "சமூக வலுவூட்டல் மற்றும் மீள் இணைத்தல் ஊடாக பாடசாலை இடைவிலகலைக் குறைத்தல்" எனும் திட்டத்தினுடாக ஒழுங்கு செய்யப்பட்ட பயிற்சிப் பட்டறை 15.10.2018 திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கம் பி.ப 4 மணி வரை கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இடைவிலகல் மாணவர்கள்  50 பேருக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றிய குறித்த பயிற்சிப் பட்டறை வளவாளர் சி.சிறிதரன் அவர்களால் நடாத்தப்பட்டதுடன். கலந்து கொண்ட மாணவர்களின் நிலையினை கருத்தில் கொண்டு புத்தகப்பை, பாதணிகள் உட்பட பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இன் நிகழ்வில் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ARM Rusaid கலந்து கொண்டாரி இவ் ஏற்பாடுகளை ESDF - S/L நிறுவனத்தின் திட்ட முகாமையளர்  பே. ரேனுகாதேவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.