மட்டக்களப்பில் பசுமைப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.



ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக “ வன ரோபா 2018 “  தேசிய மரநடுகை  நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இரண்டு மில்லியன் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

நாட்டில் 29 சதவீதமாக இருக்கின்ற காட்டு வளத்தினை   32   சதவீதமாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தின் ஊடாக  சுற்றாடல் முகாமைத்துவத்தை பாதுகாத்தல் , வனசெய்கையினை மேம்படுத்துவது,காட்டு வளத்தை பாதுகாத்தல் ,பராமரித்தல் மற்றும் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் மரங்களை நாட்டி  வளங்களை பாதுகாத்தல் போன்ற வேலைத்திட்டங்களை அரசாங்கம்  முன்னெடுத்து வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறங்களை இனங்கண்டு எல்லைப்பிரதேசங்களில் பனவிதைகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5000 ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டும் வேலைத்திட்டத்தின்  14 பிரதேச செயலக பிரிவுகளிலும்  நடைமுறைப் படுத்தி வருகின்றோம்.இதன் முதற்கட்டமாக மாவட்டத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு மரங்கள்,பழமரங்கள் வழங்கப்பட்டு அரச உத்தியோகஸ்தர்களுக்கு பசுமைப்படுத்தும் மனப்பாங்கையும்,எண்ணத்தையும் ஊட்டி வருகின்றோம்.இதன்மூலம் அரச உத்தியோகஸ்தர்களின் பிரதேசம்,இல்லம் பசுமைப்படுத்தல் ஏற்படுத்தப்படுகின்றது.

இதற்கு அமைய அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும்  நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிப மா.உதயகுமார் தலைமையில் வியாழக்கிழமை(18.2018) காலை 11.00மணியளவில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்ட செயலக வளாகத்தில்  அரசாங்க அதிபரினால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டு மரக்கன்று நடுகையினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி ,மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி. அ.பாக்கியராசா,உதவித் திட்டப்பணிப்பாளர் அ.சுதாகரன்,உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் கலந்துகொண்டனர்.