காத்தான்குடியில் பல்வேறு வீதி அபிவிருத்திகளுக்கு நிதி ஒதுக்கீடு


நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அஸ்ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பெருமுயற்சியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் "கம்பரெலிய" கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு வீதிகளின் அபிவிருத்தி பணிகளுக்காக ரூபா ஒரு கோடி ஐம்பது இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில்  நூராணிய்யா மையவாடி 1ம் குறுக்கு,2ம் குறுக்கு மற்றும் 3ம் குறுக்கு வீதிகளுக்காக ரூபா 20 இலட்சமும்,புதிய காத்தான்குடி பாய் ஒழுங்கை 1ம் குறுக்கு வீதிக்கு 10 இலட்சமும்,புதிய காத்தான்குடி மத்திய வீதி உள்ளக வீதிகளுக்காக ரூபா 20 இலட்சமும்,புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா உள்ளக வீதிகளுக்கு ரூபா 20 இலட்சமும்,காத்தான்குடி பக்கர் ஒழுங்கைக்கு ரூபா 10 இலட்சமும்,கர்பலா உள்ளக வீதிக்கு ரூபா 20 இலட்சமும்,புதிய காத்தான்குடி அல்றாஜ் ஹாஜியார் வீதிக்கு ரூபா 10 இலட்சமும்,புதிய காத்தான்குடி கப்பல் ஆலிம் வீதி உள்ளக வீதிகளுக்கு ரூபா 20 இலட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ் வீதி அபிவிருத்திப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக  நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.