பெண் சட்டத்தரணிகளின் உடையில் மாற்றம்: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு




இலங்கையில் பெண் சட்டத்தரணிகளின் தசாப்தங்கள் பழைமைவாய்ந்த ஆடை நெறிமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தினால் ஏற்படுத்தப்பட்ட குறித்த ஆடை நெறிமுறை மாற்றமானது, அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திருத்தத்தின் பிரகாரம் வெள்ளை, கறுப்பு, சாம்பல் நிறம் மற்றும் இளம் ஊதா நிற சேலைகளை அணியலாம். அல்லது குறித்த நிறங்களில் கணுக்காலுக்கு கீழ் சட்டை அணியலாம். அத்தோடு, வெள்ளைநிற, கை நீளமான சேர்ட் அணிந்து, கறுப்பு நிற முழுக் காற்சட்டையும் கோட்டும் அணியலாம்.

கர்ப்பிணித் தாய்மார்கள் கறுப்பு நிற நீண்ட சட்டையுடன் வெள்ளை நிற, கை நீளமான சேர்ட் அணியலாம். அல்லது மேற்குறித்த நிறங்களில் சேலை அணியலாம்.