டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த புதிய உபகரணங்கள்

டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக நுளம்பு பொறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான உபகரணங்கள் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும் . இதனை பொதுமக்கள் மத்தியில் முன்னெடுப்பதன் மூலம் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த முடியுமா என்பது தொடர்பில் விஞ்ஞான ரீதியில் கண்டறியப்படவுள்ளது.
இதன்மூலம் டெங்க நுளம்புகள் முட்டையிட்ட பின்னர் அதிலிருந்து வெளியேறும் குடம்பிகளை இந்த பொறிக்குள் சிக்கவைத்து வெளியேறாத வகையில் தடுப்பதே ஆகும்.

பெண் டெங்கு நுளம்புகளை குறைப்பதன் மூலம் டெங்கு பரவுவதை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பப்படுகின்றது.

இந்த பரிசோதனைக்காக 8 மாத காலம் செலவாகும் . இதன்பின்னரே இதன் பெறுபேறுகளை கண்டறியமுடியும் என்றும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உத்தேச திட்டத்தின் கீழ் இவ்வாறான பொறிகள் 1000 விநியோகிக்கப்படவுள்ளது. இதற்காக 15இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.