மட்டக்களப்பில் நீரழிவு நோய்க்கான விழிப்புணர்வு பாசறை

தற்காலச் சூழலில் மனிதவாழ்வின் மிகப்பிரதான சவால்களில் பிரதானமான ஒன்றாகக்காணப்படும் நீரிழிவு நோய் சம்பந்தமான விழிப்புணர்வு பாசறை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வைத்தியர் தாதிய மற்றும் சித்த மருத்துவத்துறை மாணவர்களின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் ( வைத்தியசாலையின் அருகாமையில்)
கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

நீரிழிவு நோயிலிருந்து மனித சமுதாயத்தை பாதுகாப்பதற்காகவும்  நோய் வராமல் எவ்வாறு தடுக்கலாம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு நோயின் தீய விளைவுகளிலிருந்த தங்களை மீட்டெடுத்துக்கொள்ளலாம் என்பவை பற்றிய தமிழ் மொழி மூலமான எளியமுறையில் அனைவராலும் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையிலான தெளிவூட்டல்கள் வழங்கப்படவிருக்கிதது. அத்தோடு நீரிழிவு நோய் விழிப்புணர்வு காணொளிக் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டிருந்தது..

சௌக்கிய பராமரிப்புப் பீடத்தின்  ஆரம்ப சுகாதார பராமரிப்பு துறையினுடைய தலைவர் வைத்தியர் கந்தசாமி அருளானந்தம் (குடும்ப வைத்திய நிபுணர்) அவர்களினுடைய நேரடி வழிகாட்டலுடன் நடைபெற்ற இவ் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு பொது மக்களிற்கான அனுமதி முற்றிலும் இலவசமான முறையில் நடாத்தப்பட்டிருந்தது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய வேந்தர் வைத்தியர் ஏ.விவேகானந்தராஜா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். விசேட அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதி உப வேந்தர் வைத்தியர் மு.நு.கருணாகரன் கிழக்குப்பல்கலைக்கழக திருகோணமலை வழாகத்தினுடைய பணிப்பாளர் கலாநிதி.ஏ.கனகசிங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கியப் பராமரிப்புப் பீடத்தின் பீடாதிபதி வைத்தியர் அஞ்சலா அருள்பிரகாசம் அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு சௌக்கியப் பராமரிப்புப் பீடத்தின் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.