கொக்கட்டிச்சோலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கொளரவிக்கும் நிகழ்வு

(வரதன்) மட்டக்களப்பு - பண்டாரியாவெளி அறிவாலயம் அமைப்பின் அனுசரணையில் இந்த ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களை கொளரவிக்கும் நிகழ்வு நேற்று கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது இங்கு மாகாணத்தில் முதலாமிடம் பெற்ற உன்னிச்சை பாடசாலை மாணவன் சா.யுகின்தரேஸ் இங்கு அதிதிகளால் கௌரவிக்கப்பட்டான்.

அறிவாலயம் ஆலோசகர் சி.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நகிழ்வில் அறிவாலயம் நிறுவுனர் அலையப்போடி நல்லரெத்தினம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், மண்முனை மேற்கு கல்வி வலய பிரதி பணிப்பாளர் எஸ் கரிகரராஜ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்  உட்பட கல்வி திணைக்கள உயர் அதிகாரிகள் பிரதேசசபைகளின் தவிசாளர்கள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்

இந்நிகழ்விவின்போது மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் வெட்டுப் புள்ளிகளுக்குமேல் பெற்ற 43 மாணவர்களுக்கு தலா(5000ருபா)வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு வைப்புப் புத்தகங்களுகம் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன்.மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றன.