குரு பிரதீபா பிரபா விருது பெற்ற புனித சிசிலியா பெண்கள் கல்லூரி நடன ஆசிரியை திருமதி. வாசுகி பார்த்தீபன்

ஆசிரிய சேவையில் உயரிய அந்தஸ்து கொண்ட விருதான குருபிரதீபாபிரபா’ விருது வழங்கும் நிகழவு 05.10.2018 அன்று பண்டாரநாயகா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் வித்தியாலயத்தில் நடன ஆசிரியையாக கடமையாற்றும்  திருமதி.வாசுகி பார்த்தீபன் அவர்களுக்கு இவ்விருது கல்வி அமைச்சினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் உயர்கல்வியை வின்சன்ட் மகளீர் கல்லூரியில் கல்விகற்று உயர்தரத்தில் கலைப்பிரிவில் திறமைச்சித்தி எய்தி இந்திய புலமைப்பரிசில் திட்டத்தில் (Indian Council for Cultural Relation)( ICCR)  தனது இளங் கலைமானி( B.FA), முது கலைமானி( M.A)பட்டங்களை முறையே கலைக்காவேரி நுண்கலைக் கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக் கழகத்திலும் நிறைவு செய்த இவர் யோகாவிலும் தனது டிப்ளோமா படிப்பை முடித்துள்ளார். இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில்
பட்டமேற்கல்வி டிப்ளோமாவையும்(PGDE) நிறைவு செய்துள்ளார்.


புனித சிசிலியா பெண்கள் மகளிர் கல்லூரியில் நடன ஆசிரியையாக பொறுப்பேற்று கொண்டு அப்பாடசாலையில்  செயற்பட்டு வருகிறார்.

அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டியில்    தொடர்ச்சியாகப் 2012 தொடக்கம் 2018 வரை பல மாணவிகளைப் பயிற்றுவித்து தேசியமட்டப் போட்டிகளில் 1ம் 2ம் இடத்தினைப் பெறச் செய்த பெருமையும் இவருக்கு உண்டு. அதாவது 2012ம் ஆண்டு நாட்டிய நாடகம் தேசிய மட்டம் 1ம் இடம், 2013ம் ஆண்டு நாட்டிய நாடகம் தேசிய மட்டம் 2ம் இடம், 2014ம் ஆண்டு தனி நடனம் 2ம் பிரிவு தேசிய மட்டம் 2ம் இடம், 2014ம் ஆண்டு நாட்டிய நாடகம் மாகாண மட்டம் 2ம் இடம், 2015ம் ஆண்டு தனி நடனம் 2ம் பிரிவு தேசிய மட்டம் 1ம் இடம், 2016ம் ஆண்டு தனி நடனம் 3ம் பிரிவு மாகாண மட்டம் 2ம் இடம், 2017ம் ஆண்டு நாட்டிய நாடகம் தேசிய மட்டம் 2ம் இடம், 2018ம் ஆண்டு தனிநடனம் 4ம் பிரிவு தேசிய மட்டம் 2ம் இடம், பெற்றது.


இவரது அனைத்து சேவைகளின் வினைத்திறனுக்கு இவ்வருடம் நடைபெற்ற சிறந்த ஆசிரியர்களுக்கான குருபிரதீபா பிரபா விருது பெற்றுள்ளமை இவரது உன்னதமான சேவைக்கு கிடைத்த உயரிய சான்றிதழாகும்.