கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் யாழ் குடா மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு

கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் யாழ் குடா மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றனர் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர்


யாழ்ப்பாணம் தீவகப்பகுதியில் அமையப்பெற்ற சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று 16 நடைபெற்ற முதற்கட்ட சிரமதானப்பணியின் பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போதே புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் பிலிப் ஜோன்சன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி எமது மண்ணிற்காக உயிர்நீர்த்த வீரமலர்களை நினைவு கூறுகின்ற நாளில் நாம் யாழ் மாவட்டத்தின் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தை கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தற்பொழுது முற்றுமுழுதாக எமது மேற்பார்வையின் கீழ் கொண்டுவந்து முதற்கட்ட சிரமதானப்பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

அந்தவகையில் எதிர்வரும் 27 ஆம் திகதிக்காக யாழ்குடா பகுதி மக்களுக்கான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்துள்ளோம் ஆதலால் அன்றைய தினம் யாழ் குடா மக்கள் அனைவரையும் ஒன்றிணைந்து எமது தேச விடுதலைக்காக போராடி மாவீரர்களாக துயில்கொள்கின்ற அனைவருக்கும் தமது அஞ்சலியினை செலுத்த ஒன்றிணைய வேண்டும் அத்துடன் திருமலையில் உள்ள ஆலங்குளம் துயிலுமில்லமும் பல அமைப்புக்களுடன் இணைந்து நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த பல வேலைத்திட்டங்களை முன் கொண்டுவந்துள்ளோம் அதன் பிரகாரம் நாம் ஒருசில வசதிகளை செய்து கொடுத்துள்ளோம் மேலும் தாயக மக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய விரும்புவபர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு இந்நினைவேந்தல் நிகழ்விற்கு உறுதுணை வகுக்குமாறு கூறிக்கொள்கின்றேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.