மட்டக்களப்பில் அதிகூடிய மழை வீழ்ச்சி

நாட்டில் மழையுடன் கூடிய கால நிலை நிலவிவருவதால் மட்டக்களப்பில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திலேயே மட்டக்களப்பு பாசிக்குடாவில் 342.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.