வர்த்தமானியை மீறி செயற்பட முடியாது : மஹிந்த தேசப்பிரிய

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்டக் குழுவொன்று நேற்று பிற்பகல் தேர்தல் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானது எனவும் இது குறித்து உரிய முறையில் கவனத்திலெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு அக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்குப் பதிலளித்த தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சட்டத்துக்கமையவே தான் செயற்படப் போவதாகவும் சட்டவாதிகளை மீறித் தம்மால் செயற்பட முடியா தெனவும் குறிப்பிட்டிருக்கின்றார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக உரிய வர்த்தமானி

கிடைக்கும்பட்சத்தில் அதற்கமையவே தம்மால் செயற்பட முடியுமெனவும் அதனை மீறிச் செயற்பட முடியாதெனவும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த உயர் மட்டக்குழுவில் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம், பாட்டாலி சம்பிக்க ரணவக்க, அஜித் பி.பெரேரா, ஹர்ஷ டி சில்வா, ஜயம்பதி விக்ரமரட்ன, சந்திராணி பண்டார, ஹிருனிக்கா பிரேமசந்திர ஆகியோருடன் சட்டத்தரணிகள் சிலரும் இடம்பெற்றுள்ளனர்.