ஏறாவூர் எல்லை வீதியில் பயங்கரம்! நடு இருட்டில் மக்கள் அவதி.

-செங்கலடி நிருபர்-
ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட ஏறாவூர் எல்லை வீதி தொடர்ந்து மின் விளக்குகள்; இல்லாமையினால்; அச்சத்துடன் பயங்கரமான சூழ்நிலையில் செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 
இரவு வேலைகளில் மக்களினால் அதிகமாக இவ்வீதி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஏறாவூர் புகையிரத நிலையத்திற்குச் செல்வோர், தூரபயணம் சென்று அதிகாலையில் புகையிரத நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்வோர், தனியார் வகுப்புக்களுக்குச் செல்லும் பாடசாலையில் கற்கும் மாணவர்கள், மற்றும் அன்றாடம் இவ் வீதியைப் பயன்படுத்துபவர்கள்  தற்போது அடிக்கடி பெய்துவரும் அடை மழை காரணமாகவும் வீதியில் மின்விளக்கு இல்லாத  இப் பயங்கரமான வீதியை பயன்படுத்துவதில் தாம் பெரும் சிரமத்தை மேற்கொள்வதாக கவலை தெரிவிக்கின்றனர். 
குறிப்பாக எல்லை வீதி, எல்லை நகர், T.C குவாட்டஸ், மற்றும் ஏறாவூர்-04 ஆகிய பகுதிகளின் வீதிகளிலும் மின் விளக்கு இல்லாமையினால் மக்கள் தொடர்ந்தும் சிரமத்துக்குள்ளாவதுடன் பல தடவைகள் திருட்டுச் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர்.


இது தொடர்பாக மக்கள் வாக்களித்து ஏறாவூர் நகரசபைக்கு அனுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர் நடேசபதி சுதாகரன் அவர்கனை நாம் தொடர்பு கொண்ட போது அவர் தெரிவிக்கையில் தாம் பல வீதிகளுக்கு மின் விளக்குகள் தமது முயற்சியினால் பொறுத்தியுள்ளதாகவும் இருப்பினும் பல வீதிகள் குறிப்பாக மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வீதியான ஏறாவூர் எல்லை வீதியில் மின் விளக்கு பொருத்துமாறு பல தடைவ மக்களின் வேண்டுகோளுக்கமைய ஏறாவூர் நகர சபை தவிசாளர் ஐ.ஏ.வாசித்அலி அவர்களிடம் கூறியும் எழுத்து மூலம் தெரியப்படுத்தியும் இது வரையில் கவணம் செலுத்தப்படவில்லையையெவும் இது குறித்து மக்களின் குற்றச்சாட்டிற்கமைய தாம் பல தடைவ தவிசாளருக்கு தெரியப்படுத்தியதாகவும் தெரிவித்தார். 

இது தொடர்பாக மக்கள் வாக்களித்து ஏறாவூர் நகரசபைக்கனுப்பிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சியின் நகரசபை உறுப்பினர் கணேசன் பிரபாகரன் அவர்களிடம் நாம் தொடர்பினை ஏற்படுத்தி கேட்டறிந்த போது அவர்  தெரிவிக்கையில் இப் பிரச்சணை தொடர்பில் பல தடவைகள் தவிசாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும்,  பல வீதிகளுக்கு மின் விளக்குகள் தமது முயற்சியினால் பொறுத்தியுள்ளதாகவும் இருப்பினும் பல வீதிகள் குறிப்பாக மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வீதியான ஏறாவூர் எல்லை வீதியில் மின் விளக்கு பொருத்துமாறு பல தடைவ மக்களின் வேண்டுகோளுக்கமைய ஏறாவூர் நகர சபை தவிசாளர் ஐ.ஏ.வாசித்அலி அவர்களிடம் கூறியும் எழுத்து மூலம் தெரியப்படுத்தியும் இது வரையில் கவணம் செலுத்தப்படவில்லையையெவும் தெரிவித்தார். 


இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் ஐ.ஏ.வாசித்அலி அவர்களை நாம் பல முறை இம் மக்களின் குற்றச்சாட்டு தொடர்பில் தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்தியிருந்தும்  பயனளிக்கவில்லை. 

மக்கள் இது தொடர்பாக தமக்கான தீர்வை பெற்றுத்தருமாறு தம்மை இப் பயங்கரமான இருள் சூழ்ந்த  பயங்கர நிலையில் இருந்து பாதுகாக்குமாறு  தெரிவிக்கின்றனர்.