அடை மழைக்கு மத்தியிலும் கோட்டைமுனை ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை


(சிவம்)

மானிட வாழ்வில் தீமை எனும் இருள் அகன்று இன்ப ஒளி மலர வேண்டியும் தேவர்களையும் மானிடர்களையும் வதம் செய்த நரகாசுரனை கிருஷணபரமாத்மா அழித்த தினத்தைக் கொண்டாடும் தீபாவளி விசேட பூஜை கோட்டைமுனை ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று (06) நடைபெற்றது.

ஆலய பிரதம குரு  தலைமையில் நடைபெற்ற பூஜையில் அடியார்கள் புத்தாடையணிந்து வேண்டுதல்களை மேற்கொண்டதோடு உற்றார் உறவினர்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்று திங்கட்கிழமை (05) காலை 8.30 மணி முதல் இன்று (06) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தினுள் மட்டக்களப்பு நகரில் 124.3 மி. மீ மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 55.9 மி;மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மேலும் அறிவித்துள்ளது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமே இதற்கான காரணம் எனவும் இக்காலநிலை தொடராக ஒரு வாரம்வரை நீடிக்கும் எனவும் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.