கட்சி வேறுபாடுகள் இன்றி மாவீரர் நாளை மக்கள் உணர்வுப்பூர்வமாக அனுஸ்டிக்க வேண்டும்

கட்சி வேறுபாடுகள் இன்றி மாவீரர் நாளை மக்கள் உணர்வுப்பூர்வமாக அனுஸ்டிக்க வேண்டும் என்கின்றார் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சின்னத்துரை புஸ்பலிங்கம்


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையினூடாக சுற்றுவேலி அமைக்கும்பணியில்    பின்னர் இன்று 15 ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.......

எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி உலகம் முழுவதும் மாவீரர் தினம் நினைவுகூறப்படுகின்ற சந்தர்ப்பத்தில் எமது மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையினை செய்து வருகின்றோம்.

கடந்த காலங்களில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாக்கியச்செல்வம் அரியநேந்திரன் ஐயா அவர்களது தலைமையில் செய்யப்பட்டுவந்த வேளையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தேசத்தின் வேர்கள் அமைப்பின் கணேசன் பிரபா அவர்களும் அதனோடு இணைந்து அஜந்தன் அவர்களும் தமிழரசு கட்சியுடன் இணைந்து நினைவுகூறலை உணர்வுபூர்வமாக அனுஸ்டித்தோம்.

அதேபோன்று இவ்வருடமும் பட்டிப்பளை பிரதேச சபை அதாவது மண்முனை தென்மேற்கு பிரதேச சபை அமைக்கப்பட்டதன் பின்னர் கட்சி வேறுபாடுகள் இன்றி எல்லா உறுப்பினர்களும் இணைந்து எமது பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள மாவீரர்  துயிலுமில்லத்தை புனரமைப்பு செய்து மக்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என எனது தீர்மானித்துள்ளோம் இதனை எனது கன்னி உரையில் நிகழ்த்தியிருக்கின்றேன்.

அந்தவகையில் முதற்கட்டமாக தற்போது சுற்றுவேலி அமைத்துக்கொண்டிருக்கின்றோம் எதிர்வருகின்ற கார்த்திகை 27 ஆம் திகதி உணர்வுபூர்வமாக எமது பிரதேசத்தில் உள்ள மக்களும் சரி வேறு பிரதேச மக்களும் மாவீரர் தினத்தை மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம் என இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் என  மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சின்னத்துரை புஸ்பலிங்கம் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.