சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை



( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

ஸ்ரீலங்கா மற்றும் கே.எஸ்.எலக்டோனிக்ஸ் அனுசரணையில் குமா புரடெக்ஸன் ஏற்பாடு செய்திருந்த ” சிறுவர் துஸ்பிரயோகம் ” மற்றும் ” பெண்களுக்கெதிரான வன்முறை ” போன்ற விடயங்களை சமூகத்தின் மத்தியில் இருந்து விரட்டியடித்து இன்றைய இளைய மாணவர் சமூகத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு இசையுடன் கூடிய பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ” இதுவும் கடந்து போகும் ” எனும் தொனிப்பொருளிலான நிகழ்வொன்று அண்மையில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியில் இடம்பெற்றது.

பாடசாலை பிரதி அதிபர் என்.நாகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பாடகரும் சமூக சேவையாளருமான மண்டூர் ஆர்.கே.எம்.வித்தியாலய பழைய மாணவர் சீ.கே.பி. பிரியன் தனது ஏற்பாட்டு குழுவுடன் கலந்து கொண்டு தான் பாடிய பாடல்களை மல்டி மீடியா மூலம் ஒளிபரப்பி இலங்கை திருநாட்டை இன்று சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் சிறுவர் துஸ்பிரயோகம் , சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் , பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவத் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.