மட்டக்களப்பு மாநகரசபையின் தேசிய வாசிப்புமாத இறுதி நிகழ்வு

(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாநகர சபையும், மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகங்களும் இணைந்து  தேசிய வாசிப்பு மாதத்தினை  சிறப்பிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களின் வாசிப்புத்திறன்களை அதிகரித்து அதன்மூலம் வினைத்திறன்,விளைத்திறன்மிக்க சமுதாயத்தை உருவாக்கும் செயற்திட்ட நிகழ்வுகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் நோக்குடன் பாடசாலைமட்டத்தில் கவிதை,சித்திரம்வரைதல்,கட்டுரை,வினாவிடை,பேச்சு,சிறுகதை,போட்டிகள் நடத்தப்பட்டன.

தேசிய வாசிப்புமாத  இறுதி நிகழ்வுகளின்  "சஞ்சிகை வெளியீடும்,பரிசளிப்பு கௌரவிப்பு நிகழ்வும்" மட்டக்களப்பு மாநகரசபை  மண்டபத்தில் மாநகரசபை முதல்வர் தியாகராசா-சரவணபவான் தலைமையில் செவ்வாய்க்கிழமை(13.11.2018)மாலை 3.00 மணியளவில் மிகவும் சிறப்பாக  நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம்- உதயகுமார் கலந்துகொண்டார்.
தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வாக “இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான வாசிப்பு “ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில்  தேசிய வாசிப்புமாத சிறப்பிதழ்களும் இதன்போது  வெளியீட்டு வைக்கப்பட்டது.வாசிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் "நக்கீரன்" எனும் குறுந்திரைப்படம் சபையோருக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தினால் "அறிவுச்சுரங்கம்" எனும் சிறப்பிதழும்,புதூர் பொது நூலகத்தினால் "புதுநகரின் புது ஒளி"எனும் சிறப்பிதழும், அரசடி பொது நூலகத்தினால், "தேன்துளி"எனும் சிறப்பிதழும் ,கல்லடி பொது நூலகத்தினால் "அறிவுப் பூங்கா"எனும் சிறப்பிதழ்களும் வெளியீடு வைக்கப்பட்டது.நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம்-உதயகுமார்  இந்த சிறப்பிதழ்களை வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதி முதல்வர் கந்தசாமி-சத்தியசீலன்,பிரதி ஆணையாளர் என்-தனஞ்சயன் ,முன்னாள் வடகிழக்கு கலாச்சாரப்பணிப்பாளர் எஸ்.எதிர்மன்னசிங்கம்,கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் "அதிபர்திலகம்" திருமதி.திலகவதி ஹரிதாஸ்,புனித மிக்கேல் கல்லூரியின் பிரதி அதிபர் வெஸ்லியோ வாஸ்,மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் எஸ்.சதீஸ்வரன், மாநகர  சபை உறுப்பினர்கள்,மாநகர சபை  பொது நூலக உத்தியோகத்தர்கள் , பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள்  கலந்துகொண்டனர்.
இதன்போது மாநகரசபை முதல்வரால் அரசாங்க அதிபர் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பெற்றார்.தேசிய வாசிப்புமாத போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள் 250 பேருக்கு சான்றிதழ்கள்,பரிசுகள் வழங்கப்பட்டது.