பாராளுமன்றத்தை கலைக்க சிறிசேன திட்டம்? சரத்பொன்சேகா கடும் எதிர்ப்பு





ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தை கலைக்க திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை முன்னாள் அமைச்சர் சரத்பொன்சேகா இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.


ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க முயலக்கூடாது என சரத்பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் அது ஜனநாயக விரோத நடவடிக்கையாக அமையும் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இதற்கெதிராக கிளர்ந்தெழுவார்கள் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசமைப்பின் கீழ் பாராளுமன்றத்தின் முழுமையான ஆயுள்காலம் பூர்த்தியாகும்வரை அதனை கலைக்க முடியாது என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரசாங்கமொன்று அதன் நாலரை வருடகாலத்தை பூர்த்தி செய்யும்வரை அதனை கலைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை என்னுடைய பீல்ட்மார்சல் பதவியையும் ஜனாதிபதியால் பறிக்க முடியாது எனவும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலக குழுவினரின் ஆலோசனையை செவிமடுத்து ஜனாதிபதி என்னுடைய பீல்ட்மார்சல் பதவியை பறித்தால் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.