நாடாளுமன்ற கலைப்பு சர்ச்சை ! உயர்நீதிமன்ற விசாரணைகள் நாளை வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் எழுந்திருக்கும் சர்ச்சை தொடர்பில் பதிலிறுக்க சட்ட மா அதிபர்கால அவகாசம் கோரியதால் உயர்நீதிமன்ற விசாரணைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன..


நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக இன்று தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை இன்றைய தினமே பரிசீலனைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் காலை முடிவு செய்திருந்தது..

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்களை கொண்ட ஆயம் இவற்றை ஆராய்ந்தன ...

நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடந்த பின்னர் இது தொடர்பில் மேலும் கால அவகாசம் தேவையென சட்ட மா அதிபர் தெரிவித்ததையடுத்து மனுக்கள் மீதான விசாரணைகளை நாளையும் தொடர தீர்மானித்து இன்றைய அமர்வை ஒத்திவைத்தனர் நீதியரசர்கள்...

நீதியரசர்கள் ஆயம் நாளை காலை பத்து மணிக்கு கூடும்