கல்வித்துறையில் தகவல் தொடர்பு தொழிநுட்ப கல்வியின் முக்கியத்துவம்


இன்று வெகுவிரைவாக வளர்ந்து வரும் நவீன உலகில் 21ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளடைவிலும் தொழிநுட்ப கல்வியின் அவசியம் ஒவ்வொருவருக்கும் வேண்டப்படுகிறது.

எமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகிறது. வகுப்பறையிலும் ஏனைய கல்வி நிறுவனங்களிலும் கற்பிப்பவர்களுக்கும்  கற்கும் மாணவர்களுக்கும் தொழிநுட்பம் சாரந்த அறிவு அவசியம். இதனடிப்படையில் தகவல் தொடர்பு நுட்பம் என்றால் என்ன? என்பதை பார்க்கின்ற போது  வெவ்வேறு வகையானதொழிநுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை மின்னணுத்தொடர்பு மூலம் ஏனையோருக்கு அனுப்புதல், சேமித்தல், புதிதாக தகவலை உருவாக்குதல், வெளிப்படுத்துதல், தகவலை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளுதலே தகவல் தொடர்பு நுட்பமாகும்.'

தகவல் தொலைத்தொடர்பு சாதனங்களாக வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, படக்காட்சி, செயற்கைகோள், கணினி மற்றும் அதை சார்ந்த மென்பொருட்கள் அடங்குகின்றன. மாற்றங்களை உட்கொண்டு வுளர்ந்து வரும் நவீன கல்வி யுகத்தில் மாற்றத்திற்கேற்ப கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டியது கற்பிக்கும் ஆசிரியர்களின் முக்கிய கடமையாகும்.

அந்தவகையில் பாடசாலைகளில் தகவல் தொழிநுட்ப சாதனங்களை பயன்படுத்துவது சாலச்சிறந்ததாகும். கல்வியில் தகவல் தொழிநுட்பத்தின் பங்கானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வகுப்பறையில் மட்டுமன்றி பல கல்வி நிறுவனங்களிலும் இதன் வகிபங்கு பிரதானமானதாகும்.

கல்வி கற்றலில் பயன்படும் நுட்பங்களாக கற்பிக்கும் உபகரணங்கள், ஆடியோ, வீடியோ மற்றும் இணைய வடிவிலான கருவிகள், மென்பொருள், ஊடகம், கல்வி சம்பந்தப்பட்ட இணையத்தளங்கள் போன்றன காணப்படுகின்றன. கல்வி கற்கும் முறையிலும், கற்பிக்கும் முறையிலும் பல்வேறு நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தகவல் தொழிநுட்பத்தை ஆசிரியர்கள் பாடங்களில் புகுத்தி கற்பிப்பதால் கல்வி வளர்ச்சி வேகம் அதிகரித்து வருகின்றது. நாம் இன்று தகவல் தொழிநுட்ப புரட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு மூலையில் அமர்ந்துக் கொண்டு கல்வி தொடர்பான அனைத்து விடயங்களை கைக்குள் கொண்டு வரும் அளவிற்கு தகவல் தொழிநுட்பம் வளர்ந்துள்ளது.

அந்தவகையில் கற்றலில் தகவல் தொழிநுட்பத்தின் பங்கு குறித்து நோக்கும் போது, கல்வியாளர்கள், கொள்கை முடிவெடுப்போர், பாடத்திட்டம் வகுப்போர் போன்றோருக்கு பல வகையிலும் தகவல் தொழிநுட்ப முறைகள் உதவுகின்றன.  இருந்த இடத்திலே நின்றுக்  கொண்டு ஏனைய கல்வி நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு கற்றலை மேற்கொள்ள முடிகின்றது.

அத்தோடு கல்வி தொடர்பான கட்டுரைகள், பாட சம்பந்தமான குறிப்புகள், கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புக்கள், கல்வி சம்பந்தமான ஏனைய குறிப்புகள் பற்றிய அனைத்து விடயங்களையும் இன்று இணையத்தளத்தின் மூலம் பெற்று கொள்ள முடிகிறது. (உதாரணம் education.com ) கல்வி தொடர்பான அனைத்து தரவகளையும் இணையத்தின் வரயிலாக பெற்றுக் தொள்வதற்கான சகல வசதிகளும் இன்றைய நவீன உலகில் காணப்படுகிறது. கல்வி தொடர்பான பழைய ஆராய்ச்சிகள் பற்றியக் குறிப்புக்களை இலவசமாக பெற்று கொள்ள முடிகிறது.

E-BOOK போன்றவற்றில் குறிப்புக்களைக் குறித்து வைத்துக்கொள்ள முடிகிறது.

அத்தோடு கல்வி நிறுவனங்களில் கணிப்பொறி மூலம் நேரடிக்கல்வியைப்(Online  education ) பெற்றுக்கொள்ளக் கூடியதாய் உள்ளது. வயது பாராது முதியோர் வரை கல்வியை பெறுவதில் தகவல் தொழிநுட்பங்கள் பெறும் பங்களிப்பு செய்கிறது. புhடசாலைக்கு அல்லது ஏனைய கல்வி நிறுவனங்களுக்கு, தொலைத்தூரத்திற்கு சென்று கல்வி கற்க இயலாதவர்கள் வீட்டில் இருந்துக் கொண்டே (distance education )கல்வியைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கும், மாணவர்கள் இலகுவில் புரிந்துக் கொண்டு மனதில் நிலைநிறுத்திக் கொள்வதற்கும் தகவல் தொழிநுட்ப முறை உதவுகிறது.

Tele conferencing (தொலைபேசி  மூலம் தகவல் பரிமாற்றம்),video conferencing> inter active video> tele talk televisionபோன்ற பல்வேறு முறைகளில் கற்றலை மேற்கொள்ள முடிகின்றது. இவ்வாறாக பல்வேறு வகையிலும்; தகவல் தொழிநுட்ப கல்விமுறை  முக்கியத்துவம் பெறுகிறது.

தொழிநுட்ப கல்வி வழங்கப்படுகின்ற போது அதனை பெற்றுக் கொள்ளுகின்றவர்கள் முறையாக பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தொழிநுட்ப சாதனங்களை  தவறான செயல்களுக்கு பயன்படுத்தலாகாது. நேர்மையாக தகவலை பெற்றுக் கொண்டு செயற்படுகின்ற போது கற்றலில் முன்னேறலாம். கற்றலில் மட்டுமன்றி மாறி வரும் உலகில் அனைத்து துறைகளிலும் தன்னை முன்னேற்றி கொண்டு சிறந்த வாழ்க்கையை சமூகத்தில் வாழலாம். எனவே தொழிநுட்ப கல்வியின் முக்கியத்துவத்தையும், அதன் சேவையையும் உணர்ந்து ஒவ்வொருவரும் கற்றலை மேற்கொள்ள வேண்டும்.

அ.சுகனேஷ்வரி
2ம் வருடம் சிறப்புக்கற்கை
கல்வி,பிள்ளை நலத்துறை , கிழக்குப் பல்கலைக்கழகம்.