லண்டன் லூசியம் சிவன் கோவிலில் இடம்பெற்ற கேதாரகௌரி விரதம்


லண்டன் லூசியம் சிவன் கோவிலில்   கேதாரகௌரி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது .

இலங்கையில் மட்டுமல்லாது உலகலாவிய ரீதியில் இருக்கின்ற தமிழ் மக்களால் 21 நாட்கள் சிவனை வேண்டி இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

600  இற்கும் அதிகமான அடியார்கள் காப்பு நூலைப் பெற்று அவர்களது விரத நியதிகளை அனுஷ்டித்தனர்

இவ் ஆலயமானது கிழக்கு மாகாணத்தில் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .


கேதாரம் என்பது இமயமலைச்சாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் எனக் குறிப்பிடப்படும்.

இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலனாக அர்த்நாரியாகவும், அர்த்தநாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும்.

வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதார கௌரிவிரதம் எனவும் ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.