முஸ்லிம்கள் அனுபவித்த சகல பிரச்சினைகளுக்கும் எனது தலைமையிலான அரசிலேயே தீா்வு காணப்பட்டது - மஹி்ந்த

(அஷ்ரப் ஏ சமத்)


 கடந்த கால யுத்தின் போது வட கிழக்கு பகுதிகளில் முஸ்லிம்கள் அனுபவித்த சகல பிரச்சினைகளுக்கும் எனது தலைமையிலான அரசிலேயே தீா்வு காணப்பட்டது. முதுாரில் ஏற்பட்ட பிரச்சினைகள், முஸ்லிம்கள் வட கிழக்கில் வேலான்மை செய்ய முடியாது நிலமை,  வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களது மீளக் குடியமா்த்தும் நடவடிக்கைகளை நானே முன்னெடுத்தேன்.  என பிரதம மந்திரி மஹி்ந்த ராஜபக்ச தெரிவித்தாா்

பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ச அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினரை  (12) மாளிகாவத்தையில் உள்ள ஜம்மியத்துல் உலமாவின் செயலகத்தில் வைத்து சந்திததாா். . இச் சந்திப்பில்  ஜம்மியத்துல் உலமாவின் செயலாளா் அஷ் ஷேக் எம்.ஏ.எம் முபாறக் , தலைமையில் நடைபெற்றது. அமைச்சா் பைசா் முஸ்தபா, பேராசிரியா் ஜீ.எல்.பீரிஸ், தேசிய சுதந்திர முன்னணி அமைப்பாளா் மொஹமட் முசம்மில்  மற்றும் பல உலாமாக்களும் கலந்து கொண்டனா்.
இச் சந்திப்பினை அமைச்சா் பைசா் முஸ்தாபாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற்து.


இங்கு உரையாற்றிய பிரதம மந்திரி

 அளுத்கம சம்பவத்தின்போது நானும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளாரும்  நாட்டில்  அன்று இருக்க வில்லை.   அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களது வீடுகளை   மீள வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தாகவும் அவா் தெரிவித்தாா்.   முஸ்லிம்களுக்கு இனிஒருபோதும் எவ்வித பிரச்சினைகளும்  ஏற்படாது.  அரசியல் லாபங்களுக்குாக  சகல இனங்களிலுமிருந்து   இனரீதியாக கட்சிகள் உள்ளன.  அவா்களே அவ்வப்போது இனங்களை  பிரித்து ஆளுகின்றனா்.  தேசிய கட்சிகளில் அங்கம் வகிக்கும்போது இவ்வாறான இன,மத.ரீதியான பிரிவுகள் இல்லாது நாம் இலங்கையா் என்ற ரீதியில் இந்த நாட்டில் வாழ முடியும். 

இங்கு உரையாற்றிய அஷ் ஷேக் அர்கம் நுராமித் - நாட்டின் 30 வருட  யுத்தனை முடிபுக்கு கொண்டு வந்து நாட்டில் சமதானத்தையும் ஜக்கியத்தையும் ஜனநாயகத்தையும்  நிலை நாட்டிய தலைவா்  என்ற் வகையில்  நீங்கள் இந்த நாட்டில்  தொடர்ந்தும்  ஜனநாயகமும் சமாதானமும் ஓங்கி நிற்க முயற்சித்தீா்கள், எனவும்  இந்த நாட்டு மக்களிடையே  இனவாதம் ஒழிந்து அனைவரும் இலங்கையா் என்ற ஒரே குடையில் தெடா்ந்தும்  பயனிபதன் ஊடாக  எமது தாய் நாட்டை கட்டியெழுப்புவதில் பங்காளியாக மாற்றினீா்கள்.  தங்களது காலத்திலும் சில இன ரீதியாக சிலா் செயற்பட்டதையும்  கண்டி ,திகன, அளுத்கம அம்பாறை பிரச்சினைகளை இடம்பெற்றதையும்  நினைவுபடுத்தினாா்.

அத்துடன் தாசீம்  மௌலவி -  கூறுகையில் -அம்பாறை மவாட்டத்தில் சுனாமியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக சவுதி அரசாங்கம் 500 வீடுகள்  நிர்மாணிக்கப்பட்ட ன. அவ் வீடுகள் இன்றும் பகிா்ந்தளிக்கபடாமல் இருப்பதாக தெரிவித்தாா். . இதற்கு பதிலளித்த   அமைச்சா் பைசா் முஸ்தபா  இ்வ் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக நீதிமன்றில் ஒரு வழக்கு இருந்ததாகவும் அதனை பகிா்ந்தளிப்பதற்கு உரிய பிரச்சினைகளை  பிரதமா் மகிந்த ராஜபக்ச தலையைில் கலந்துடையாடுவதாகவும் அவா் தெரிவித்தா்.

பிரதம மந்திரி பதிலளிக்கையில்   இவ் வீடுகள் அரசியல் வாதிகள் பகிா்ந்தளிப்பதில் ஏற்பட்ட பிரச்சினைககளாலே அவ வீடமைப்புத் திட்டம் பகிாந்தளிப்பதில் காலம் தாழ்த்தப்பட்டதாக தெரிவிததாா்.  இந்த நாட்டினை இன ரீதியாக பிரித்தால்  கொழும்பிலும் வெள்ளவத்தையும் துண்டு துண்டுகளாக பிரிக்க வேண்டி ஏற்படும்.  ஒரு இறைமையான ஜக்கிய நாட்டினுள் சகல சமுகங்களும் ஒரு  தேசிய ரீதியாக வாழும் முறையே சலகருக்கும் சிறந்தது என பிரதமா் மேலும் பதிலளிததாா்.