சுகாதார அமைச்சராக சமல் இராஜபக்ஷ ! 2 அமைச்சர்களும் 1 இராஜாங்க அமைச்சரும் இன்று சத்தியப்பிரமாணம்

புதிய அமைச்சர்கள் இருவரும் , இராஜாங்க அமைச்சர் ஒருவரும்   ஜனாதிபதி செயலகத்தில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.


ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள இந்த அறிக்கையில் திரு சமல் இராஜபக்ஷ சுகாதாரம் போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சராகவும் , திரு எஸ்பி திசாநாயக்க பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராகவும் திருமதி பவித்திராதேவி வன்னியாராச்சி பெற்றோலியவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் இன்று (07) பதவிப்பிரமணம் செய்துள்ளனர்.