திருக்கோவில் பிரதேச நல்லிணக்க செயலணி அங்குரார்ப்பணம்




(எஸ்.கார்த்திகேசு)

கடந்த காலத்தை சுகப்படுத்தி எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக அகில இலங்கை நல்லிணக்க செயற்பாட்டுக்கான
திருக்கோவில் பிரதேச நல்லிணக்க செயலணி அங்குரார்ப்பணம்

இலங்கையில் கடந்த காலத்தை சுகப்படுத்தி எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப் பொருளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக அகில இலங்கை நல்லிணக்க சமாதான பொறிமுறை செயற்பாட்டு திட்டத்தினை முன்னெடுப்பதற்கான பிரதேச சமாதான நல்லிணக்க செயலணி அங்குரார்ப்பம் செய்யப்பட்டுள்ளது


இவ் நல்லிணக்க செயலணி அமைப்பது தொடர்பாக கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலகத்தில்   வெள்ளிக்கிழமை(09) இடம்பெற்றது.

இந் நிகழ்வின் போது திருக்கோவில் பிரதேச செயலாளர் அவர்களினால் திருக்கோவில் பிரதேசத்திற்கான 45பேர் கொண்ட நல்லிணக்க பொறிமுறை செயற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ் செயலணியில் பிரதேச செயலாளரை தலைவராக் கொண்டு பொலிஸ், சுகாதாரம், கல்வி, சிவில் பாதுகாப்பு, முதியோர் சங்கம், மதகுருமார்கள், இளைஞர்,யுவதிகள், பொது அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள் பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியேரைக் உள்ளக்கியதாக 45உறுப்பினர்களை கொண்ட நல்லிணக்க செயலணிக் குழு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் இந்த நாட்டில் கடந்த காலங்களில் இன, மதங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணவு கட்டியெழுப்பப்படாமையே கசப்பான சம்பவங்கள் நாட்டில் இடம்பெறுவதற்கு காரணமாக அமைந்திருந்தன என்பதனை இன்று அனைத்து தரப்பினர்களாலும் உணரப்பட்டுள்ளது.

இதனை தவிர்த்து கடந்த காலத்தை சுகப்படுத்தி எதிர்காலத்தை ஒன்றுமையாக வாழ்வதற்கான சூழலை கட்டியெழுப்பும் நோக்கில் இவ் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிப்க்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே இன்று திருக்கோவில் பிரதேசத்திற்கான நல்லிணக்க செயற்பாட்டுக் குழு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தள்ளார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.நடேசன், தேசிய பல்லிணக்க ஒற்றுமைக்கான மாவட்ட இணைப்பாளர் எஸ்.சுதேஸ்ரூஷாந்தன் திருக்கோவில் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரிவுக்கான தலைவர்கள் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.