மட்டக்களப்பு மாவட்டத்தில் எச்ஐவி - எயிட்ஸ் தொடர்பாக விழிப்புணர் வேலைத்திட்டங்கள் நடைபெற்றது.



(ஏறாவூர் நிருபர்)AM Rikas
எச்ஐவி - எயிட்ஸ் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் 05.12.2018 மட்டக்களப்பு மாவட்டத்திலும் நடைபெற்றன.

உலக தரிசன நிறுவனத்தின் கிரான் பிராந்திய அபிவிருத்தித்திட்ட அலுவலகத்தினால்; கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் பங்கேற்றனர்.

அத்துடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் தன்னார்வ தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பிரசன்னமாயிருந்தனர்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஸ்ரீ லங்கா குடும்ப திட்டமிடல் அமைப்பு , ஸ்ரீ லங்கா சனத்தொகை சங்கம், லிப்ட் மற்றும் அம்கோர் ஆகிய அமைப்புக்களும் பங்களிப்புச் செய்திருந்தன.

எச்ஐவி, தொற்றுநோய் மற்றும் தொற்றா நோய்க் கட்டுப்பாட்டுப்பிரிவு வைத்தியர் திருமதி அனுஷா சிறிசங்கர் இதன்போது கருத்துரை வழங்கினார்.

பரீட்சார்த்தமாக இரத்தப் பிரசோதனை நடவடிக்கைகளும் இங்கு நடைபெற்றன.

உலகில் எச்ஐவி- எயிட்ஸ் நோயினால் மரணமடைந்தவர்களை நினைவுகூர்வதுடன் இந்நோயினால் ஏனையவர்கள் பாதிக்கப்படாது பாதுகாக்கும் நோக்குடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார போஷாக்கு பிரிவு திட்டமிடல் இணைப்பாளர் தம்பிராஜா ரொஷாந்தன் தெரிவித்தார்.