ஊக்கிவிப்புப் பணமும் பொங்கல் பொதிகளும் வழங்கிவைக்கும் நிகழ்வு


இரண்டாவது  குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த ஒன்பது தாய்மார்களுக்கு தலா ரூபா 10,000.00 வழங்கி வைக்கப்பட்டதுடன்  இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட 63 குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகளும் வழங்கி வைக்கும் நிகழ்வு 16 ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) மகிழவட்டவான் கிராமத்தில்  இடம்பெற்றது.
புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் ஆதரவில் கிராம அபிவிருத்தி என்ற  தலைப்பில் மண்முனை மேற்;கு பிதேச செயலகப் பிரிவில் உள்ள நரிப்புல்லுத்தோட்டம், மகிழவட்டவான் நெல்லூர். விழாவட்டவான், சொறுவாமுனை, பங்குடாவெளி மற்றும் மணிபுரம் ஆகிய கிராம அபிவிருத்திச் சங்கங்கங்களினூடாக, மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலையில் உள்ள பாடசாலையின் நிலைமை கருதி பிரதேச தமிழ் மக்களின் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும்  நோக்கில் முதல் கட்டமாக நரிப்புல்லுத்தோட்டம், மகிழவட்டவான் கிராமங்களில் 2016ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறுவர் தினத்தை முன்னிட்டு 2வது குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த  தாய்மார்களுக்கு தலா ரூபா 10,000.00 வும்; பிள்ளை பராமரிப்பிற்காக 18 வயது வரை மாதம் தோறும் தலா ரூபா 1,000.00 வும் வழங்கி வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டமானது மூன்றரை வருடங்களைக் கடந்த நிலையில் பல பாராட்டுதல்களையும், அதிகப்படியான ஆதரவையும் பெற்றுவந்துள்ளமையால் இன்னும் வலுவூட்டப்பட்ட நிலைமையில்  இந்நிகழ்வு இடம்பெற்றது.
அதிதிகளாக ஓய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளர்  k.சத்தியநாதன் கலந்துகொண்டு கூறுகையில் புதிதாக இணைந்து கொண்ட தாய்மார் நீண்ட கால இடைவெளிக்குப் பின் மூன்றாவது, நான்காவது பிள்ளைகளைப்பெற்று இணைந்துள்ளமை மகிழ்வடையச் செய்வதாகவும்  இத்திட்டம் பிறப்பு வீதத்தை அதிகரித்துள்ளது என்பதை உணரக்கூடியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிபாளா எஸ்..மகேந்திரகுமார் உரையாற்றகையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே இவ் அமைப்பு கன்னி முயற்சியாக ஆரம்பித்த செயற்றிட்டம் இன்று வெற்றியளித்திப்பதுடன் இன்று பல அரச, அரசசார்பற்ற நிறுவனங்களும் முன்னெடுத்து வருவது ஓர் ஆரோக்கியமான விடயம் எனக் குறிப்பிட்டார், மேலும் கலந்து கொண்டு சிறப்பித்த பிரதிக் கல்விப்பணிபாளர், கே.ஹரிகரராஐh கூறுகையில் புலம்பெயர் வாழ் எமது சமூகம் தங்களது செலவீனங்களை குறைத்து சேகரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்ற இந் நிதிகள் சரியான முறையில் பயன்பெற அனைவரும் ஒன்றுசேர்ந்து முயற்சிப்பது கட்டாயமானது எனவும் குறிப்பிட்டர் 

இந்நிகழ்வில் சுவீஸ் வாழ் திருமதி.சிவசாந்தி அமிர்தலிங்கம் நேரடியாக வந்து பார்வையிட்டதுடன் ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்ததார். மேலும் பாடசாலை சமூக ஆர்வலர்கள் கிராம அபிவித்திச் சங்கத் தலைவர்கள், பிரதேச சபைஉறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர். அதேவேளை  Londan Birmingham
 
என்னும் இடத்தில் வசிக்கும் சமுகசேவகரும்  சுபாஸ்  அவர்கள் அப்பிரதேசத்தினைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு நீரிணைப்பினைப் பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது