மட்டு மாவட்டத்தில் போதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியாளர்களுக்கு விசேட பயிற்சிகள்






மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பாவனையில் சிக்கியுள்ளவர்களை அதில் இருந்து மீட்டு சமூகத்தில் இணைக்கும் பணியை முன்னெடுக்கும் வகையில் உளவளத்துணையாளர்களுக்கான விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.


மட்டக்களப்பு மாவட்ட உளநல நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த பயிற்சிகள் உளவளத்துணையாளர்களுக்கு வழங்கப்பட்டன.

கடந்த எட்டு தினங்களாக மயிலம்பாவெளி கிறிஸ்தவ மண்டபத்தில் நடைபெற்ற இந்த பயிற்சியின் நிறைவு தினமான இன்று பயிற்சிகளைப்பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட உளநல நிலையத்தின் இயக்குனர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமெரிக்காவினை சேர்ந்த உளவளத்துணையாளர் டாக்டர் மைக்கல் மக்னட்டி கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கிவைத்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இருந்து 40க்கும் மேற்பட்ட உளவளத்துணையாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த பயிற்சியில் போதைப்பொருள் பாவனையில் உள்ளவர்களை அதில் இருந்து மீட்டு சமூகத்தில் நல்ல பிரஜையாக இணைத்தல் அவர்களின் செயற்பாடுகளை சமூகம் நோக்கியதாக கொண்டுசெல்லும் வகையிலான உளவள செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.