புகையிரதத்தில் மோதுண்டு யானை உயிரிழப்பு


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் தெடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை கெழும்பில் இருந்து யாழ்ப்பாணம்  நோக்கி வருகைதந்த தபால் புகையிரதத்தில் மேதுண்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்த யானையினை அகற்ற வனஐுவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பனிக்கன்குளம் கிராம அலுவலர் உள்ளிட்டோர் நடவடிக்கை கெண்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு தினங்களாக பனிக்கன்குளம் பகுதியில் யாணை கிராமத்துக்குள் புகுந்து மக்களுக்கு பல்வேறு இன்னல்ளை கெடுத்துவந்துள்ளது.

நேற்று இரவு ஏழு மணிமுதல் ஊருக்குள் புகுந்த யானைகள் மக்களுக்கு தொல்லை கெடுப்பதுதெடர்பில் மக்களால் மாங்குளம்பெலிசார் மற்றும் ஒட்டுசுட்டான் பிதேசசெயலாளர் ஊடாகவனஐுவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குதெரியப்படுத்தியும் அவர்கள் யானையை திறத்த வருகை தராததால் யானை புகையிரதத்தில் மோதுண்டு இறந்துள்ளது.

வனஐீவராசிகள் திணைக்களம் யாணையையோ மக்களையோ  பாதுகாக்க் வருகை தராத அதிகாரிகள் மீது விமர்சனம் வெளியிடும் மக்கள் இரவு அதிகாரிகள் வந்து யானையை கலைத்த்திருந்தால் குறித்த யானை அநியாயமாக உயிரிழந்திருக்காது எனவும் குறித்த அதிகாரிகள் மீது குறித்த திணைக்களம் நடவடிகை எடுக்கவேண்டும் எனவும்தெரிவித்துள்ளனர்.