பெரிய கல்லாறு இந்து இளைஞர் மன்ற பாலர் பாடசாலையின் பரிசளிப்பு விழா





ரவிப்ரியா

பெரியகல்லாறு இந்த இளைஞர் மன்றத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாபெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் கணக்குப்பிள்ளைகமல்ராஜ தலைமையில்; செவ்வாயன்று (04) மாலை இந்து கலாசாரமண்டபத்தில் நடைபெற்றபோது. தலைமையுரை இடம்பெறுவதையும்மாணவர்களின் கலை நிகழ்வையும் பிரதம விருந்தினர் பட்டிருப்பு கல்விவலய பாலர் பாடசாலை வெளிக்கள உத்தியோகத்தர் சா.பரணிதரன் மற்றும்அதிபர் எஸ்.முருகானந்தம் ஆகியோர் சிறார்களுக்கு பட்டம் சூட்டிசான்றிதழ் வழங்கி வைப்பதையும். கலந்து கொண்டோரில் ஒருபகுதியினரையும் படங்களில் காணலாம்.

ஆத்மீக அதிதியாக சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீச.மேகானந்தக் குருக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். பிரதம அதிதி தனதுஉரையில் பாலர் பாடசாலை ஆசிரியர்களின் அர்ப்பணிப்படன் கூடியகடினமான பணியை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். பெற்றோர் ஓரிருதங்கள் பிள்ளைகளை வீட்டில் வைத்து பராமரிப்பதில் பலத்த சிரமங்களைஎதிர்கொள்ளுகின்றனர். ஆனால் பெற்றோர் பாலர் பாடசாலையில் பிள்ளைகளைச் சேர்த்தபின் தங்கள் கடமை முடிந்தததென இருந்துவிடுகின்றனர்.

ஐம்பதற்கு மேற்பட்ட மாணவர்களை பாலர் பாடசாலையில் பராமரிப்பதென்பது சவாலுக்கரிய விடயம். எனவே பெற்றோர்ஆசிரியர்களுக்கு தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும. என்றுகேட்டுக் கொண்டார்.

மேற்கூறிய கருத்து யதார்த்தமானது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் குறித்த அசிரியர்களின் சமூகப் பொறுப்பு மிக்கது என்பது இங்குசுட்டிக்காட்டத் தக்கது.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். இளமையில் கல்வி சிலையில் எழுத்துஎன்பதெல்லாம் பெறுமதியான பொருள் பொதிந்த பொன்மொழிகள். இதுஇந்தச் சிறார்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பது.

இந்நிலையில் எமது கலை கலாசாரத்தை பிஞ்சு மனங்களில் பதிக்கவேண்டிய பாரிய பொறுப்பும் அவர்களைச் சார்ந்து நிற்கின்றது. ஆனால்இங்கு நடைபெற்ற கலை நிகழ்வுகள் அனைத்துமே (ஒரு நிகழ்வை தவிர)எமது கலை கலாசாரத்தை பிரதிபலிக்காத மிகந்த கவலை அளிக்கும்விடயமாகம்.

இன்று இளம் சமூகம் வழிதவறிச் செல்வதற்கும் ஒழுக்க மீறல்களுக்கும் அனேகமான தமிழ் சினிமா படங்கள்; வழிவகுத்துக் கொடுக்கின்றன என்பது கசப்பான உண்மையாகும்.
எனவே சிறார்களை சரியாக கையாளவிட்டால் அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும். எமது பாரம்பரிய கலைகளான கும்மி. கோலாட்ம் காவடிகரகம் மற்றும் பரதம் போன்ற கலைகளை அறியாதவர்களாகவே இவர்கள் வளர்ந்துவிடுவார்கள் .; அருகிவரும் எமது பாரம்பரிய கலைகளை கட்டிக்காக்க வேண்டிய பாரிய பொறுப்பும் பாலர் பாடசாலைஆசிரியர்களிடமே தங்கியிருக்கின்றது.

இவற்றைத் தவிர்த்து சினிமா பாடல்களுக்கு மட்டும் நடன நிகழ்வுகளைதயார் செய்தமையானது எற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஆனால்மாணவர்களிடம் நல்ல திறமை இருக்கின்றது என்பதை அவைஎடுத்துக்காட்டவே செய்தன.; எனவே எமது பாரம்பரிய கலைநிகழ்வகளையும் அவர்களால் திறமையாக வெளிப்படுத்த முடியும். எனவேஎதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் இடம் பெறாமல் இருப்பதுஅவசியமாகும்.

பொறுப்பு வாய்ந்த இந்து இளைஞர் மன்றத்தின் கீழ் இயங்கும் பாலர்பாடசாலை ஒழுங்கு செய்யும் பரிசளிப்ப விழா அதன் தரத்தைவெளிப்படுத்த வேண்டும். அது தவறவிடப்பட்டிருப்பது எதிர்காலத்தில்தவிர்க்கப்பட வேண்டும் .;

நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்த தலைவர் சமூகமளிக்கவில்லை.அழைப்பிதழும் உரியமுறைப்படி தயாரிக்கப்படவில்லை.; அழைப்பிதழில்ஒளிவிழாவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மேடையில் அதுசம்பந்தமாக எதுவம் இடம்பெறவில்லை. எனவே எதிர்காலத்தில்இத்தகைய குறைபாடுகள் சமூகப் பொறுப்புடன்நீக்கப்படவேண்டும்