சபாநாயகருக்கு எதிராக உச்ச மன்றில் மனு தாக்கல்





நீதிமன்றத்தை அவமதித்தமை

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக அரசியலமைப்பின் 105 (3) ஆம் சட்டப்பிரிவின்படி நீதிமன்றத்தை அவமதித்தமைக்கான குற்றச்சாட்டை தாக்கல் செய்யும் மனு நேற்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சட்டத்தரணி அருண லக்சிறி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதியின் பாராளுமன்ற கலைப்பு தீர்மானம் பற்றி உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமை மனுக்கள் பலவற்றை விசாரித்துக்கொண்டிருந்த போது பாராளுமன்றத்தை சபாநாயகர் கூட்டிய தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தியதாக சட்டத்தரணி அருண லக்சிறி மேற்படி மனுவை தாக்கல்செய்துள்ளார்.

பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடந்த 13ஆம் திகதி இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பித்திருந்தது. அந்த நிலையில் கடந்த 14ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவரும் நோக்கில் சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருந்ததாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.