துப்பாக்கி சூட்டு சம்பவம் ! சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது அதில் மூவர் விடுதலை ! பொலீஸ்மா அதிபர் மட்டக்களப்பிற்கு வருகை

(  விஜயரெத்தினம்)
பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மட்டக்களப்பு திடீர் விஜயம்.

கொழும்பில் இருந்து அவசரமாக மட்டக்களப்பிற்கு வருகை தந்த பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர  சம்பவம் நடைபெற்ற  இடத்திற்கு சென்று பாதுகாப்பு நிலைமைகளை  ஆராய்ந்தார்.   .இச்சம்பவம் தொடர்பாக துரித விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும்  பொலிசார், விஷேட அதிரடிப்படை,  புலனாய்வு அதிகாரிகள் துரித விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமெனவும்  பணித்தார்.



அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு சென்ற பொலிஸ்மாதிபர் பூஜித ஜயசுந்தர கொல்லப்பட்ட இரு பொலிசாரின் சடலங்களையும் பார்வையிட்டதுடன் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளையும் அழைத்து முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியதுடன் நேற்று வெள்ளிக்கிழமை (30) மாலை ஊடகவியலாளர்களை சந்தித்துச் சென்றுள்ளார்.

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் மீது  இனந் தெரியாத நபர்களால் விடியற்காலை  நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரு பொலீசார் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளதுடன்;பொலிஸ்மா அதிபரின் வருகை நடைபெற்ற சம்பவம் குறித்த பின்னணி தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுத்தி உள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையில் உள்ள சீசீரிவி கமரா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இதனால் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 பேர் வீதியில் கதைத்து நின்றுள்ளார்கள்.இவர்களை உனடியாக கண்டு பிடித்து துரித விசாரணைகளை பொலிசார்  மேற்கொண்டுள்ளார்கள்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூன்றுபேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.கைதுசெய்யப்பட்ட ஒருவரை பொலிஸ் நிலையத்தில் வைத்து தொடர்ச்சியாக  விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.