பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சிறிய நடுத்தர முயற்சியாளர்கள் பங்களிக்க வேண்டும்.





இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சிறிய நடுத்தர முயற்சியாளர்கள் பங்களிக்க வேண்டும். - அரசாங்க அதிபர்

ஏற்றுமதி வருமானத்தை 2025ல் 250 பில்லியன்களாக அதிகரித்து இலங்கையினுடைய பொருளாதாரத்தைக் கட்டியேழுப்புகின்ற உத்ததேசத்திட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த சிறிய நடுத்தர முயற்சியாளர்கள் மிகச்சிறந்த பங்களிப்பினை வழங்க வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

தொழில்முயற்சியாளர்கள் சந்தைப்படுத்துதல் ஆலோசனைகளைப் பெறுதல், நிதிபெறுதல் போன்ற விடயங்களில் எதிர்நோக்குகிறார்கள். அவ்வாறான பிரச்சினைகளை தீர்த்தல் தொடர்பில் பல்வேறு பட்ட நிறுவனங்கள், அமைச்சுக்கள் ஊடாக சிறிய நடுத்தரக் கைத்தொழிலாளர்களை மேம்படுத்தல் என்ற நோக்கில் தேசிய தொழில் முயற்சி அதிகாரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் செயலமர்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.


இச் செயலமர்வில் தலைமையுரையாற்றும் போதே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

இலங்கையின் பொருளாதரத்திலே இந்த சிறிய நடுத்தர முயற்ச்சியாளர்களின் செயற்பாடு முக்கியமானது. இதனை எவ்வாறு அதிகரிக்கலாம். இந்த சிறிய நடுத்தர முயற்ச்சியாளர்களில் 75 வீதமானவர்கள் 45 வீதமான வேலை வாய்ப்பினை இலங்கையிலே வழங்குபவர்களாகும்.

52 வீதமான நாட்டின் தேசிய உற்பத்தில் வழங்கப்படுபவர்களாகவும் காணப்படுகின்றனர். இலங்கையை பொறுத்த வரையிலும் கிட்டத்தட்ட 15 வீதமான நிறுவனங்கள் இந்த சிறிய நடுத்தர முயர்ச்சியாளர்கள் சம்பந்தமான நிகழ்ச்சிகளை ஒழுங்கு படுத்துகின்ற நிறுவனங்களாக இருக்கின்றன.

ஆனால் அதிகமான நிறுவனங்களுக்கு இடையிலே அவர்களுடைய தொழில் ரீதியான விடயங்களுக்கு இடையிலே பல்வேறுவகையான வேறுபாடுகள் அல்லது அவர்களுக்கு இடையிலே ஒற்றுமை காணப்படாத ஒரு நிலையிலே அவதானித்த தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு இதுசம்பந்தமாக அனைத்து நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்தும் முகமாக நிறுவன மயமாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.

இவ்வாறாக இலங்கையிலே இருக்கின்ற 15 மாவட்டங்களில் இருக்கின்ற தொழில் முயற்ச்சியாளர்களிடையே , அதை போல இந்த நிறுவனங்கள் தொடர்பான அரச உத்தியோகத்தர்களை சந்தித்து அவர்களிடம் இருந்து இந்த தொழில் துறை சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து அது சம்பந்தமாக எதிர்காலத்தில் இலங்கையில் நடைமுறை படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த தொழில் மயப்படுத்த படுகின்ற நிறுவனங்கள் சார்பாக தொழில் செயல்பாட்டினை ஒழுங்கு படுத்தும் செய்ற்பாடு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

சட்ட மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் செயற்படும் நிறுவனத்தின் ஊடாக முன்மொழிவுகளை வழங்கும் வகையில் செயற்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு வினாப்பத்திரம் ஒன்று உங்களுக்கு தரப்பட்டு அவற்றில் இருந்து அவர்கள் பெற்று கொண்ட முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு சிறிய நடுத்தர முயற்சியாளர்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தினுடைய செயற்பாட்டின் அடிப்படையில் ஏற்றுமதி வருமானத்தை 2025ல் 250 பில்லியன்களாக அதிகரித்து இலங்கையினுடைய பொருளாதாரத்தைக் கட்டிழுப்புகின்ற உத்ததேசத்திட்டத்தினை அரசாங்கம் முன்கொண்டு செல்கிறது. அதில் சிறிய நடுத்த முயற்சியாளர்களது பங்களிப்பு மிக முக்கியமானது. அதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த சிறிய நடுத்தர முயற்சியாளர்கள் மிகச்சிறந்த பங்களிப்பினை வழங்க வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

சிறிய நடுத்தர முயற்சியாளர்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் ஏர்ண்ன் அனட் யுஆங் ஆலோசனை நிறுவனத்தின் முகாமையாளர் அர்ஜுன ஹேரத், நிறைவேற்று அதிகாரி ரொட்னி அன்ரனி, ஆலோசகர் யூசுப் நிமால்தீன் ஆகியோர் இக் கலந்துரையாடலை நடத்தியதுடன், வழிபடுத்தலை தேசிய தொழில் முயற்சி அதிகார சபையின் அபிவிருத்தி உத்தீயோகத்தர் திருமதி கீதா சுதாகரன் மேற்கொண்டிருந்தார்.

இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், வங்கி முகாமையாளர்கள், தொழில் முயற்சியாளர்கள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.