கல்முனை மாநகர பஸார் பிரதேசம் ஒளியூட்டி, அலங்கரிப்பு..!




(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர பஸார் பிரதேசம், மிகப்பிரகாசமான எல்.ஈ.டி. தெரு விளக்குகளினால் ஒளியூட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் பிரதி அமைச்சர் ஹரிஸ் எம்.பி. அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக அவரது சகோதரரான பிரபல தொழிலதிபர் எச்.எம்.எம்.அமீர் அலி அவர்களினால் 18 இலட்சம் ரூபா பெறுமதியான 23 தெரு மின்விளக்கு தொகுதிகள் மாநகர சபைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தன.

கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை சுற்றுவட்டத்திலிருந்து மக்கள் வங்கி சுற்றுவட்டம் வரையும் அங்கிருந்து பொலிஸ் நிலைய வீதி ஊடாக வெஸ்லி உயர்தர பாடசாலை சுற்றுவட்டம் வரையிலான பிரதேசத்திற்கும் இவை பொருத்தப்பட்டு, ஒளியூட்டப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் தொழிலதிபர் எச்.எம்.எம்.அமீர் அலி, மாநகர சபையின் ஆணையாளர் எம்.சி.அன்சார், பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ், மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி றோஸன் அக்தார், எம்.எஸ்.நிஸார், ஏ.சி.ஏ.சத்தார், ஏ.எம்.பைரோஸ், சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், செலஸ்டினா, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ.பாவா, ரீ.எல்.எம்.பாறூக் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.