கொக்கட்டிச்சோலையில் சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளை கௌரவிப்பு

( சரவணன்)

சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலை உதய ஒளி மாற்றுத்திறனாளி அமைப்பினால் மாற்றுத்ததிறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு கொக்கட்டிச்சோலை  கலாச்சார மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றது.

'அங்கங்களை இழந்தாலும் நெஞ்சத்தில் உறுதிகொண்டு இவ்வுலகில் தளராது தலை நிமிர்வோம்' என்ற தொனிப் பொருளில் உதய ஒளி மாற்றுத்திறனாளி அமைப்பின்; தலைவர் கி-பாக்கியராசா தலைமையில் இடம்பெற்றது

இந்த நிகழ்வில்  பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ;, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர்.எஸ்.சிறிதரன், 

கமிட் நிறுவன தலைவர் காண்டீபன் உட்பட பட்டிப்பளை பிரதேசசபை உறுப்பினர்கள் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமூகசேவை உத்தியோகத்தர்hகள் அதிதிகளாக கலந்துகொண்டு மங்களவிளக்கேற்றி உயிர்நீத்த அனைத்து பொதுமக்களுக்கும் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்சிகள் இடம்பெற்றதுடன்    மாற்றுத்திறனாளிகளுக்கு அதிதிகளாக கலந்துகொண்டவர்கள் மலர் மாலை அணிவித்து  கௌரவித்து உரையாற்றினர். 

இந்த நிகழ்வு இதில் 300 க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது