கிழக்கில் முஸ்லிம் ஆயுதக்குழுக்களும் தற்பொழுதும் இயங்கி கொண்டிருக்கின்றன


(வாகீசன் )
கிழக்கு மாகாணத்தில் கருணா, பிள்ளையான் மற்றும் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் தற்பொழுதும் இயங்கி கொண்டிருக்கின்றன என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் புலிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் பிலிப் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக உடடினடியாக ஆயுதக்களைவு ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு வவுணதீவில் படுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று மட்டக்களப்பு கல்லடியில்  நேற்று  (திங்கட்கிழமை) மாலை நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரச படைகளை தவிர்த்து ஏனைய ஆயுதக்குழுக்களில் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் களைய வேண்டும். அதன் மூலமாக இவ்வாறான படுகொலைகள் நிறுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகள் இன்னும் இயங்கி கொண்டிருக்கின்றன. கருணா பிள்ளையான் ரெலோ, புளட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப். ,மற்றும் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் இன்னும் இயங்கி கொண்டிருக்கின்றன.

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் தான்ன் ஆயுதக்குழுவொன்றை இரவு முழுவதும் பாதுகாத்ததாக ஒத்துக்கொண்டிருக்கின்றார்.

இதேவேளை சிறைச்சாலையிருக்கின்ற நபர் ஒருவர் 35 ஏ.கே.துப்பாக்கிகள் இருப்பதாக கூறியிருக்கின்றார்.

இது வரைக்கும் அரசாங்கம் அதைப்பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே இவ்வாறான ஆயுதங்கள் களையப்படல் வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் புலிகள் கட்சியின்; ஊடகப் பேச்சாளர் பிலிப் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.