மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 120 குடும்பங்களுக்கான வெள்ளநிவாரண உலர்வுணவு பொதிகள் வழங்கப்பட்டது





அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு 124 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன இதனுடன் 260 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டு வரட்சி நிவாரங்கள வழங்கப்பட்டு வருகின்றன

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த நிவாரண சேவைகள் திணைக்களத்தின் ஊடாக மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுல கிராம சேவை பிரிவில் கரையோர பகுதியில் வாழும் 120 குடும்பங்களுக்கான வெள்ளநிவாரண உலர்வுணவு பொதிகள் வழங்கப்பட்டது

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ் சுதாகர் தலைமையில் கொத்தியாபுலை சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் ,பிரதம அதிதியாக கலந்துகொண்டு உலர்வுணவு பொதிகளை வழங்கி வைத்தார்

இந்நிகழ்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ் .கோகுல ராஜா , உதவி பிரதேச செயலாளர் எஸ் .சுபா சதாகரன் , மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் மாவட்ட இணைப்பாளர் இ .சிவநாதன் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் ,, கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,ஆலய பரிபாலன சபையினர் கிராம பொது அமைப்பினர் என பலர் கலந்துகொண்டனர்