மாளிகைக்காடு அல்- ஹுசைன் வித்தியாலய வித்தியாரம்ப விழா- 2019




ஹுதா உமர்

2019 ஆம் ஆண்டில் தரம் ஒன்றில் கல்வி பயில ஆரம்பிக்கும் மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா இன்று 2019.01.19 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் மாளிகைக்காடு கமு/கமு/அல்-ஹுசைன் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.நளீர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண கணனி தொழிநுட்ப பேரவையின் தவிசாளரும், கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளருமான,சிம்ஸ் கேம்பஸ் முதல்வர் கலாநிதி அன்வர் எம் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கல்முனை வலய கல்வி அலுவலக பாடசாலைகள் இணைப்பாளர் அன்வர் சித்திக் ,ஆசிரிய ஆலோசகர் திரு.ரவீந்திரன் ஆகியோர் விசேட அதிதியாக கலந்து கொண்டனர்.

தரம் இரண்டு மாணவர்களால் புதிதாக பாடசாலைக்கு வருகைதந்த தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வைத் தொடர்ந்து இடம் பெற்ற வித்தியாரம்ப விழாவில் கலந்து கொண்டு பேசிய நிகழ்வின் பிரதம அதிதி கலாநிதி அன்வர் எம் முஸ்தபா அவர்கள் எமது கிழக்கு மாகாண பாடசாலைகளில் இடம்பெறுகின்ற கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் பாரிய நெருக்கடிகள் இருப்பதாகவும், மாணவர்கள் பாரிய மனஅழுத்தம் நிறைந்தவர்களாக பாடசாலை சூழ்நிலையில் கல்வி கற்பது இப்போது நிறைந்து காணப்படுவதாகவும் தெரிவித்தார். பாடசாலை நேரம் தவிர்ந்து அதிக நேரம் வீட்டு சுழலில் வசிக்கும் மாணவர்களின் ஒழுக்க விழுமியத்தில் பெற்றோர்கள் கவனம் செலுத்தவேண்டிய காலம் இது என தெரிவித்தார். அத்துடன் குறித்த இந்த பாடசாலையின் அபிவிருத்தியில் தான் கரிசனையுடன் செயலாற்றி சிறந்த பாடசாலையாக மிளிர உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.