இலங்கை மத்தியவங்கி எனும் பெயரில் அனுப்பப்படும் மோசடி மின்னஞ்சல்

இலங்கை மத்தியவங்கி எனும் பெயரில் மோசடியான முறையில் மின்னஞ்சல்கள் அனுப்படுகின்றமை குறித்து மத்தியவங்கி கவனம் செலுத்தியுள்ளது.

Notice from Central Bank of Sri Lanka EPF எனும் பெயரில், இலங்கை மத்தியவங்கியின் ஊழியர் சேமலாப நிதி திணைக்களத்தின் முகவரியிட்டு, போலியான முறையில் நாட்டின் நிதி நிறுவனங்களை இலக்குவைத்து இந்த மின்னஞ்சல்கள் அனுப்பபடுவதாக மத்தியவங்கி குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மத்தியவங்கியின் ஊழியர் சேமலாப நிதி திணைக்களத்தினால் அவ்வாறு எந்தவொரு அறிவுறுத்தலும் விடுக்கவில்லை என பொதுமக்களுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் அறிவிப்பதாக மத்தியவங்கி குறித்த அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.

Notice from Central Bank of Sri Lanka EPF எனும் பெயரில் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் கிடைக்கப்பெறுமாயின், அதனை திறப்பதனையும் அல்லது அதனுள் காணப்படுகின்ற இணைப்புக்களைத் திறப்பதனையும் தவிர்க்குமாறும் மத்தியவங்கி, மக்களிடமும் நிதிநிறுவனங்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.